$12.8மி. ஓசிபிசி வங்கி மோசடி: 20 வயது நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

$12.8மி. ஓசிபிசி வங்கி மோசடி: 20 வயது நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
20f918fd-348a-467b-addc-0ce734d8a800
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

ஓசிபிசி வங்கி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 20 வயது நபர் ஒருவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

லியோங் ஜுன் ஸியான் மீது திட்டமிட்டக் குற்றச்செயல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டு, கலவரம் புரிந்ததற்காக இரண்டு குற்றச்சாட்டுகள், குற்ற நடத்தைக்காக இரண்டு குற்றச்சாட்டுகள், மற்றும் இதர 10 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

லியோங்வுடன் மேலும் ஆறு இளையர்கள் மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு வெளிநாட்டு கும்பல்களுடன் பணமோசடியில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் காட்டுகின்றன.

லியோங் தமக்குக் கீழ் வேலை பார்க்க ஆள்கள் சேர்த்து, அவர்கள் மூலம் ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற்றதாகக் கூறப்பட்டது. இந்த விவரங்களை அவர் வெளிநாட்டில் உள்ள கும்பல்களுக்குக் கொடுத்தார் என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

சென்றாண்டு டிசம்பர் 8ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜனவரி 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் $12.8 மில்லியனை குறுந்தகவல் மோசடியில் இழந்தனர்.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் இழந்த பணத்தை வங்கி திருப்பியளித்தது. .

லியோங் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டு வரை சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.