செயலிகளில் மூலம் போதைப் பொருளைப் பரிவர்ததனை செய்த 32 பேர் கைது

செயலிகளில் மூலம் போதைப் பொருளைப் பரிவர்ததனை செய்த 32 பேர் கைது

1 mins read
e159374d-54d8-4250-94ac-e288f89d42f0
படங்கள்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 3

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு டெலிகிராம் தளம் போன்ற செயலிகளைக் குறிவைத்து நடத்தில சோதனையில் 32 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இந்தச் செயலிகள் வழி போதைப் பொருள்களை விற்றதாகவும், வாங்கியதாகவும் கூறப்பட்டது.

ஏப்ரல் 18, 19 ஆகிய இரண்டு தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் $140,000 மதிப்புள்ள போதைப் பொருள்களும் சிக்கின. 191 கிராம் ஐஸ், 718 கிராம் கஞ்சா, 714 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவற்றோடு மற்ற பல போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இதுபோன்று செயலிகள் மூலம் போதைப் பொருள் விற்பவர்களைக் குறிவைத்து நடத்திய சோதனையில் சென்றாண்டு நவம்பர் மாதம் 50 சந்தேக நபர்கள் பிடிப்பட்டனர்.

செயலிகள் வழி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்கும் என நம்பிக்கையில் அவ்வாறு செய்வதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.