சமூக ஊடகத் தளங்களில் 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் லீ சியன் லூங்

சமூக ஊடகத் தளங்களில் 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் லீ சியன் லூங்

1 mins read
fbaed101-3edb-4c1c-946a-915b1b1a5a58
படம்: லீ சியன் லூங்/பேஸ்புக் -

பிரதமர் லீ சியன் லூங் சமூக ஊடகங்ளில் இணைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பேஸ்புக் தளத்தில் தமது முதல் பதிவை செய்தார்.

தற்போது 1.7 மில்லியன் பேர் அவரது பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடருகின்றனர்.

முதன்முறையாக சமுக ஊடகத் தளத்தில் இணைந்தபோது, என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை என்றார் திரு லீ. இணையவாசிகளுடனும், பொதுமக்களுடனும் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இது நல்ல தளமாக இருந்தது என்றார் அவர்.

திரு லீயின் பல பகிர்வுகள் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றன. அவர் மற்ற உலகத் தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர் நடைபயிற்சிக்குச் செல்லும்போது எடுத்த படங்கள், இஸ்தானாவுக்குள் பறந்துவந்து ஆந்தை காணொளி போன்ற பல தருணங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

தமக்கு அளித்துவரும் ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்டார் திரு லீ,