காலனித்துவ கட்டடங்களில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை விரிவாக்கம்

காலனித்துவ கட்டடங்களில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை விரிவாக்கம்

2 mins read
f830c4ed-d3da-43ae-97b4-117ff1703f7e
ஹேலிஃபேக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள இரு காலனித்துவ கட்டடங்களில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் புதிய 'கேகேஎச்@ஹேலிஃபேக்ஸ்' அமைந்துள்ளது. படம்: கேகேஎச் -

உள­வி­யல் மருத்­து­வம், தோல் மருத்­து­வம் ஆகிய மருத்­து­வப் பிரி­வு­கள் தொடர்­பில் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­மனை அதன் புதிய விரி­வாக்­கம் வழி­யாக மேலும் அதி­க­மான சேவை­களை வழங்­க­வுள்­ளது. புதிய சேவை­கள் கால­னித்­துவ கட்­ட­டங்­களில் அமைந்­தி­ருப்­பது மேலும் ஒரு சிறப்­பா­கும்.

இரு மருத்­து­வப் பிரி­வு­களில் தற்­போது அமைந்­துள்ள மருந்­த­கங்­க­ளின் எண்­ணிக்கை முன்­பைக் காட்­டி­லும் இரு மடங்­கா­கும். இத­னால் ஆண்­டுக்கு 30% அதி­க­மானோ­ருக்கு மருத்­து­வர்­கள் ஆலோ­சனை வழங்க முடி­யும். புதிய வச­தி­கள் நேற்­று­மு­தல் இயங்­கத் தொடங்­கின. அவற்­றில் மருந்­துக்­கடை ஒன்­றும் அடங்­கும் என்று கூறப்­பட்­டது.

"மேலும் அதி­க­மான மருந்­த­கங்­களும் தோல் மருத்­து­வச் சிகிச்­சைக்­கான அறை­களும் இருப்­ப­து­டன் நாள்­பட்ட தோல் பிரச்­சி­னை­கள் உள்ள மாதர் மற்­றும் சிறார் களுக்கு நாம் இனி முழு­மை­யான மருத்­துவ ஆலோ­ச­னை­யை­யும் வழங்க முடி­யும். இத­னால், தங்­களின் சிகிச்­சைத் திட்­டங்­கள் குறித்து நோயா­ளி­க­ளால் நன்கு அறிந்­து­கொள்ள முடி­யும்," என்று மருத்­து­வ­ம­னை­யின் தோல் மருத்­து­வப் பிரி­வின் தலை­வ­ரும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான இணைப் பேரா­சி­ரி­யர் மார்க் கோ தெரி­வித்­தார்.

மர­பி­யல் தோல் வியா­தி­கள், ரத்­தக்­கு­ழாய்ப் பிரச்­சி­னை­கள், கடும், நாள்­பட்ட அரிக்­கும் தோல் அழற்சி போன்ற சிக்­க­லான பிரச்­சி­னை­க­ளைக் கையா­ளும் ஆற்­றல், புதிய மருந்­த­கங்­க­ளுக்கு உண்டு என்­றார் அவர்.

மருத்­து­வ­ம­னைக்கு உள­வி­யல் ரீதி­யாக உதவி நாடி வரும் நோயாளி­க­ளுக்­கும் புதிய வச­தி­கள் பல­ன­ளிக்­கும் என்று மருத்­து­வ­மனை எதிர்­பார்க்­கிறது.

"மக­ளிர் மற்­றும் சிறா­ரின் மன­நலத் தேவை­கள் அதிக தொடர்­பு­டை­யவை. ஒரே சூழ­லில் இவ்­விரு பிரி­வி­ன­ருக்­கும் தொடர்ந்து பரா­ம­ரிப்பு வழங்க முடி­வது நிச்­ச­யம் பய­னுள்­ள­தாக அமை­யும்," என்று மருத்­து­வ­ம­னை­யின் உள­வி­யல் மருந்­துப் பிரி­வின் தலை­வ­ரும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான இணைப் பேரா­சி­ரி­யர் ஹெலன் சென் கூறி­னார்.

மன அழுத்­தம், கவலை, மன­நலக் கோளா­று­கள் மற்­றும் மன­நோய்­கள், ரத்த நாள அழற்­சிப் பிரச்­சி­னை­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய பிரி­வின்­கீழ் தங்­க­ளின் வாழ்க்­கை­யில் வெவ்­வேறு கட்­டங்­களில் இருக்­கும் பெண்­க­ளுக்­கும் சிறா­ருக்­கும் மேலும் சிறந்த மருத்­துவ, ஆத­ர­வுத் திட்­டங்­களை விரி­வடைந்­துள்ள புதிய வச­தி­கள் வழி மேற்­கொள்­ள­லாம் என்று கூறப்­பட்­டது. 1930களில் கட்­டப்­பட்ட இரு கால­னித்­துவ கட்­ட­டங்­களில் புதிய 'கேகே­எச்@ஹேலி­ஃபேக்ஸ்' அமைந்­துள்­ளது.