ஷெங் சியோங்: வரும் ஆண்டுகளில் மேலும் சில கிளைகள்

ஷெங் சியோங்: வரும் ஆண்டுகளில் மேலும் சில கிளைகள்

1 mins read
45917f0c-2dfc-4ab7-81db-a3e5fcab6585
-

ஆண்டுக்கு மூன்றிலிருந்து ஐந்து கிளைகள் வரை புதிதாகத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங் நேற்று தெரிவித்தது. தற்போது சிங்கப்பூரில் 65 கிளைகளைக் கொண்ட ஷெங் சியோங், அதன் ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டது.

கடந்த ஆண்டு மூன்று புதிய கிளைகளின் குத்தகையை நிறுவனம் வெற்றிகரமாகக் கைப்பற்றியது. இம்மூன்று கிளைகளின் மூலம் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டது. 2021ன் இரண்டாம் பாதியில் $688.1 மி. வருமானம் பதிவாகியது.