பசுமை விமானப் பாதை

பசுமை விமானப் பாதை

2 mins read
b1758bef-6b61-4bb4-8702-3a8f3489e7a6
-

சிங்கப்பூர்-நியூசிலாந்து விமானங்களுக்கான திட்டம் ஆராயப்படுகிறது

நீடித்து நிலைக்­கக்­கூ­டிய எரி­

பொ­ரு­ளில் விமா­னங்­கள் இயங்­கும் வகை­யில் பசுமை விமா­னப் பாதையை ஏற்­ப­டுத்­தும் சாத்­தி­யம் குறித்து சிங்­கப்­பூ­ரும் நியூ­சி­லாந்­தும் ஆராய உள்­ளன.

தொடர்ந்து, இந்தப் புதிய திட்­டத்­திற்கு ஆகக்­கூ­டிய செல­வு­கள், தேவைப்­படும் தொழில்­நுட்­பம் ஆகி­ ய­வற்றை இரு நாடு­களும் கலந்து ஆலோ­சிக்­கும்.

பசுமை எரி­பொ­ரு­ளில் இயங்­கக்­கூ­டிய விமா­னங்­களை இரு நாடு­க­ளின் பய­ணி­களும் பயன்

­ப­டுத்­திக்­கொள்­வதை ஊக்­கு­விப்­பது எப்­படி என்­பது குறித்­தும் அப்போது ஆலோ­சிக்­கப்­படும்.

இதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்று நேற்று கையெ­ழுத்­தா­னது. ஜுவல் சாங்கி விமான நிலை­யத்­தில் நடை­பெற்ற கையெ­ழுத்­தி­டும் சடங்கை நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­ட­னும் சிங்­கப்­பூர் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ர­னும் பார்­வை­யிட்­ட­னர்.

பின்­னர், இணைந்து பணி­யாற்­றக்­கூ­டிய நான்கு அம்­சங்­க­ளைப் பட்­டி­ய­லிட்டு இரு நாடு­களும் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

கொள்கை மற்­றும் ஒழுங்­கு­முறை, தொழில்­துறை வளர்ச்சி, வருங்­கால உள்­கட்­ட­மைப்­புத் திட்­ட­மி­ட­லும் அதற்­கான ஏற்­பா­டு­களும், ஊழி­ய­ரணி உரு­மாற்­றம் ஆகி­யன அந்த நான்கு அம்­சங்­கள்.

நீடித்து நிலைக்­கக்­கூ­டிய விமான எரி­பொ­ருள் மீதான நம்­ப­கத்­தன்­மையை அதி­க­ரிக்க இரு நாடு­களும் இணைந்து பணி­யாற்ற முடிவு செய்­துள்­ளன.

நேற்­றைய நிகழ்­வின்­போது விமா­னப் போக்­கு­வ­ரத்து நிலைத்­தன்மை மீதான பங்­காளித்­து­வத்­தின் அவ­சி­யத்தை போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் விளக்­கி­னார்.

2050ஆம் ஆண்­டு­வாக்­கில் உல­க­ளா­விய விமா­னப் போக்­கு­

வ­ரத்­துத் துறை வெளி­யேற்­றக்­

கூ­டிய கரி­ய­மில வாயு­வின் அளவு 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் இரு­ம­டங்கு ஆகக்­கூ­டும் என்று அவர் கூறி­னார். பசுமை எரி­பொ­ருள் அந்த வெளி­யேற்­றத்­தைக் குறைக்க உத­வும் என்­ற­ாலும் அதற்கு அதிக செல­வா­கும் என்று திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.