'ஓசிபிசி'யில் மோசடி: தண்டனையை எதிர்நோக்கும் முதல் ஆடவர்

'ஓசிபிசி'யில் மோசடி: தண்டனையை எதிர்நோக்கும் முதல் ஆடவர்

1 mins read
c568f9d3-7621-4e7b-bcbf-a668f1f8e328
-

ஓசி­பிசி வங்­கி­யில் நடை­பெற்ற இணைய மோச­டிச் சம்­ப­வங்­கள் தொடர்­பாக 20 வயது ஆட­வர் ஒரு­வர் தமது குற்­றங்­களை ஒப்­புக்­கொண்டுள்­ளார்.

லியோங் ஜுன் ஸியான் எனப்­படும் இவர் இந்த மோசடி தொடர்­பாக நீதி­மன்­றத்­தால் விசா­ரித்து முடிக்­கப்­பட்ட முத­லாம் நபர்.

இவ­ருக்­கான தண்­டனை அடுத்த வாரம் விதிக்­கப்­படும் என்று தெரி­கிறது. அது­வரை அவரை சீர்­தி­ருத்­தப் பயிற்சி மையத்­தில் விசா­ர­ணைக் கைதி­யாக வைத்­தி­ருக்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

மேலும், சீர்­தி­ருத்­தப் பயிற்சி மற்­றும் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­புக்கு இவர் தகு­தி­யா­ன­வரா என சான்று அளிக்­கு­மா­றும் தமது உத்­த­ர­வில் அவர் குறிப்­பிட்­டார்.

ஓசி­பிசி வங்கி அதி­கா­ரி­கள் போல செயல்­பட்ட கும்­பல் வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு வங்­கிக் கணக்­கில் தவறு நடந்­தி­ருப்­ப­தா­கப் பொய்­யாகக் கூறு­வர். பின்­னர் இணைப்பு ஒன்றை அனுப்­பு­வர் அந்த இணைப்­பைச் சொடுக்­கி­னால் மறைச்­சொல் போன்ற ரக­சி­யத் தக­வல்­க­ளைப் பெற்று பணத்­தை மோசடி செய்து விடு­வர்.

தனது வாடிக்­கை­யா­ளர்­களில் 790 பேர் மோச­டி­யில் ஏமாந்­த­தா­க­வும் அவர்­கள் இழந்த தொகை $13.7 மில்­லி­யன் என்­றும் கடந்த ஜன­வரி மாதம் ஓசி­பிசி வங்கி கூறி­யது.

தம் மீதான ஐந்து குற்­றச்­சாட்­டு­களை லியோங் ஒப்­புக்­கொண்­டார். லியோங்­கு­டன் இதர ஏழு பேரும் சேர்ந்து கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கும் மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் அவர்­கள் 17 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட வய­தி­னர் என்­றும் நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.