சிங்கப்பூருக்கு வந்துசேரும் சரக்குகளை விரைவாக சோதித்து அனுமதி வழங்க குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்திற்கு நடமாட்டத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.
இதன் காரணமாக வாகன ஓட்டுநர்கள் தாங்கள் எடுத்துச் செல்லவேண்டிய சரக்கின் ஒப்புதல் படத்திற்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டி வராது.
'ஆன்-த-ஃபிளை கிளியரன்ஸ்' என்று அழைக்கப்படும் புதிய நடவடிக்கை துவாஸ் துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் பிறகு ஓட்டுநர்கள் அங்கு காத்திருக்கும் நேரம் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் என குறைந்தது. இதற்கு முன்னர் அவர்கள் 14 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
உலக வர்த்தக நடுவம் என்னும் நிலையை வலுவாக்கிக்கொண்டு வரும் சிங்கப்பூரில், அதிகமான சரக்குகளைக் கையாளும் துறைமுகமாக துவாஸ் துறைமுகத்தை ஆணையம் தயார்ப்படுத்தி வருகிறது.
2040ஆம் ஆண்டுவாக்கில் 65 மில்லியன் 20அடி சரக்குக் கொள்
கலன்களைக் கையாளும் வகையில் இந்தத் துறைமுகத்தை மாற்றுவது எப்படி என்பதை செய்தியாளர்களிடம் துறைமுகக் கண்காணிப்பாளர் விளக்கினார்.
அவ்வாறு தயாரானால் தற்போதைய 50 மில்லியன் கொள்கலன்
களைக் காட்டிலும் 30 விழுக்காடு அதிகமாக துவாஸ் துறைமுகம் கையாளும்.
தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி மற்றும் பாசிர் பாஞ்சாங் முனையங்களை இந்தத் துறை
முகம் ஒருங்கிணைப்பதன் மூலம், கையாளப்படும் ஏற்றுமதி, இறக்கு மதி சரக்குகளின் அளவு அதி
கரிக்கும்.
சரக்குகளைப் பாதுகாப்பதற்கான தேவை எழுவதால் புதிய சரக்கு அனுமதி முறையிலான நடவடிக்கை அடுத்த ஆண்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தாள் ஆவணங்களற்ற சரக்கு அனுமதி முறை யும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சரக்குகளை எடுத்துச் செல்ல வரும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகன பதிவெண் பலகைப் படத்தையும் சரக்கு அனுமதி எண்ணையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தின் மின்னிலக்க எஸ்ஜி வருகை அட்டை வாயிலாகச் சமர்ப்பித்தால் போதுமானதாக இருக்கும்.
ஆவணங்களை நேரில் காட்டி அனுமதி வாங்கும் முறை அதன் பின்னர் படிப்படியாக விடைபெறும்.

