பல்வேறு நபர்களின் முகவரி
களைப் பெற லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒரு
வருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபில்பெர்ட் லிம் ஸோங் ஸியான், 35, எனப்படும் அவர் தம் மீது சுமத்தப்பட்ட இரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
முகவரிகளைப் பெற இவருக்கு உதவிய லீ செங் யான், 38, என்பவருக்கும் இதேபோன்ற தண்டனை இவ்வாண்டு ஜனவரி 27ஆம் தேதி விதிக்கப்பட்டது. லிம்மிடம் சிலர் கடன்பெற்றதாகக் கூறப்படு கிறது. அதனை வசூலிக்க தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி கடனாளிகளின் முகவரிகளைப் பெற அவர் எண்ணினார்.
2017ஆம் ஆண்டு அவரைத் தொடர்புகொண்ட லீ, தமக்குத் தெரிந்தவர்கள் இதற்கு உதவுவார்கள் என்றார்.
அவர்கள் சிங்டெல், ஸ்டார்ஹப் அல்லது எம்1 ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள் என்பது லிம்முக்குத் தெரியும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
லீக்குத் தெரிந்தவர்கள் தொலைபேசி சந்தாதாரர்களின் முகவரி
களைப் பெற்றுத் தருவது என்பது தவறான செயல் என்பதும் லிம்முக்குத் தெரியும் என்றார் வழக்
கறிஞர்.
இருந்தும் சிங்டெல்லின் சில்லறை விற்பனை ஆலோசகராக அப்போது பணியாற்றிய கெல்வின் ஃபூ சீக் ஆன், 32, என்பவரின் உதவி லீ மூலம் அவருக்குத் தேவைப்பட்டது.
இதற்காக, லீக்கு இரு முறை தலா $350 லஞ்சமாகக் கொடுத்தார் லிம். அந்தத் தொகையிலிருந்து கெல்வின் ஃபூக்கு அவர் சிறு தொகையைக் கொடுத்தார்.
பணம் பெற்றுக்கொண்டு சிங்டெல் சந்தாதாரர்களின் முக
வரிகளை எடுத்துக் கொடுத்த கெல்வின் ஃபூக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

