வர்த்தகம், உணவு, தொழில்நுட்பத்தில் புத்தாக்க மேம்பாட்டுக்கு கைகோப்பு
சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் வர்த்தக, உணவு மற்றும் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தைமேம்படுத்தக்கூடிய இரு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
ஷா சென்டரில் சிற்றுண்டி அமர்வின்போது நடைபெற்ற கையெழுத்து சடங்கை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும் அந்நாட்டின் வர்த்தக, ஏற்றுமதி வளர்ச்சி அமைச்சர் டேமியன் ஓகோனரும் பார்வையிட்டனர்.
நியூசிலாந்து வர்த்தக, நிறுவனம் சார்ந்த அமைப்புகளுக்கும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புக்கும் இடையே வளர்ச்சி ஏற்பாட்டுக்கான மேம்படுத்தப்பட்ட பங்
காளித்துவம் உருவாகி உள்ளது.
இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள் நிபுணத்துவத்தையும் அறிவார்ந்த தகவல்
களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ளவும் வர்த்தகம், தொடர்புத்திறன் மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியன தொடர்பான பொதுவான அம்சங்களில் வர்த்தகக் கூட்டணியை வலுப்
படுத்தவும் இந்தப் பங்காளித்துவம் ஊக்குவிக்கிறது.
நிகழ்வில் உரையாற்றிய திருவாட்டி ஆர்டன், உலக அளவி லான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து பணியாற்றக் கிடைத்திருக்கும் ஒத்துழைப்பு தமக்கு உற்சாகம் அளிப்
பதாகக் குறிப்பிட்டார்.
மூப்படையும் மக்கள்தொகை, அதிகரித்து வரும் உணவு விரையம் மற்றும் சத்தான உணவுக்கான பயனீட்டாளர் தேவை ஆகியன இரு நாடுகளும் கவனம் செலுத்தக்கூடிய உலகளாவிய பிரச்சினைகள் என்றார் அவர்.
"நமது உறவுகள் போட்டித்தன்மையால் வரையறுக்கப்பட்டாலும் தீர்வுகளை எட்ட போட்டித்திறனைப் பயன்படுத்துவதில் நன்மைகள் உள்ளன. ஆயினும், சிலவற்றுக்குத் தீர்வுகாண நாம் இணைந்து பாடு படுவது அவசியம்," என்றார் அவர்.

