சிங்கப்பூரில் படத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் துன்
புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக 'அவேர்' எனப்படும் செயல்திறன் மற்றும் ஆராய்ச்சிக்கான மாதர் சங்கம் தெரிவித்து உள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் வன்முறைக்கு இவ்வகையான துன்புறுத்தல்கள் துணைபுரிவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கு பதிவான தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் வன்முறைச் சம்பவங்களில் 10ல் ஏழு சம்பவங்கள் (70%) படத்தை அடிப்படையாகக் கொண்ட துன்புறுத்தல்கள் என்று அந்தச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலின சமத்துவத்தை வலி
யுறுத்தும் குழுவின் பாலியல் தாக்குதல் பராமரிப்பு நிலையம் (எஸ்ஏசிசி) இதுவரை கண்டிருக்கும் படம் அடிப்படையிலான பாலியல் துன்புறுத்தல்களில் இதுவே ஆக அதிகமான விகிதம்.
இது படிப்படியாக சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு இந்நிலையத்தின் கவனத்திற்கு வந்த, தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் வன்முறைச் சம்பவங்களில் 65 விழுக்காடு படம் அடிப்படை
யிலான துன்புறுத்தல்கள். இந்த விகிதம் 2019ஆம் ஆண்டு 61 விழுக்காடாக இருந்தது.
மின்னிலக்க கேமரா, சமூக ஊடகங்கள், தகவல் தளங்கள் போன்றவற்றின் வாயிலாகவும் 'டேட்டிங்' எனப்படும் தனிப்பட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் கைபேசிச் செயலிகள் வாயிலாகவும் மேற்கொள்ளப்படும் விரும்பத்தகாக பாலியல் நடத்தைகள் 'தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் வன்முறை' என குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய 163 வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஆண்டு புதி தாகப் பதிவாயின. இவற்றில் 134 சம்பவங்களில் நன்கு அறிமுகமான வர்களால் பாலியல் துன்புறுத்தல்கள் தரப்பட்டன. எஞ்சிய 29 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் தெரியாதவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள்.
படத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் துன்புறுத்தல்களும் அதில் அடங்கும்.
மற்றொருவரின் பாலியலைத் தூண்டும், ஆடையற்ற, அந்தரங்க புகைப்படங்களும் காணொளிப் படங்களும் படம் அடிப்படையிலான பாலியல் துன்புறுத்தலாக வகைப்
படுத்தப்படுகின்றன.
பாவாடைக்குள் படமெடுப்பது, பாலியல் உணர்வைத் தூண்டும் படங்களைத் திருடுவதற்காக ஒரு
வரின் சாதனத்திற்குள் ஊடுருவுவது, ஒருவரின் ஆபாசப் படத்தை பிறருக்கு அனுப்புவது ஆகியன படம் அடிப்படையிலான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எடுத்துக்காட்டு என்கிறது 'அவேர்'.

