ஜயண்ட் சிங்கப்பூர் பேரங்காடி தனது நிறுவனத்தின் சொந்தப் பொருளான ஜாயன்ட் ஃபார்ம் முட்டைகளின் விலையை மே 3ஆம் தேதி நோன்புப் பொருள் வரை குறைக்கவுள்ளது.
முப்பது முட்டைகள் கொண்ட ஒரு தட்டு இதுவரை $7.50ஆக விற்கப்பட்டது. இனி ஒரு தட்டு முட்டைகள் $6.50க்கு விற்கப்படும்.
எல்லா ஜயண்ட் சிங்கப்பூர் பேரங்காடிக் கடைகளிலும் அதன் இணைய விற்பனையிலும் இந்த விலை நடப்பில் இருக்கும்.
வாடிக்கையாளர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தட்டு முட்டைகள் - அதாவது 60 முட்டைகள் - வாங்கலாம்.
சிங்கப்பூரில் அண்மையில் முட்டை விலைகள் கூடியுள்ளன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய முட்டைப் பண்ணைகளில் நோய்க்கிருமித் தொற்று ஏற்பட்டது.
அத்துடன் உக்ரேன் போருடன் கோழித் தீவனம், எரிசக்தி, போக்குவரத்து விலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளது.
ஃபேர்பிரைஸ் பேரங்காடியும் புதன் அன்று அதன் நிறுவனத்தின் சொந்தப் பொருளான பசார் ஃபிரெஷ் முட்டைகளின் விலையைக் குறைத்தது.
முப்பது முட்டைகள் $6.95க்கு விற்கப்படும்.

