நான்கு கோள்கள் நேர் கோட்டில் வந்த அரிய நிகழ்வு

சிங்கப்பூரில் கடந்த சில நாள்களாக ஒரு அரிய நிகழ்வு ஆகாயத்தில் தென்பட்டுள்ளது.

வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி ஆகிய கோள்கள் ஒரு நேர் கோட்டில் காட்சியளிக்கும் அற்புதம் சில நாள்களுக்கு முன் தோன்றியது.

எந்தவொரு தொலைநோக்கு கருவியின்றி இந்த நிகழ்வைப் பார்க்கமுடிகிறது. இதுபோன்ற நிகழ்வு மிக அரியது என்று கூறப்பட்டது.

இந்த கண்கொள்ளாக் காட்சியைப் பலர் புகைப்படங்கள் எடுத்து சமூகத் தளங்களில் பகிர்ந்துகொண்டுவருகின்றனர்.

முதலில் செவ்வாய், சனி, வெள்ளி ஆகிய கோள்கள் மார்ச் மாத இறுதியிலிருந்து தென்பட்டதாகவும், வியாழன் பிறகு இந்தக் கோட்டில் இணைந்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

ஏப்ரல் 23 முதல், இந்த வரிசையில் சந்திரனும் சேரவிருக்கிறது.

இந்தக் காட்சியைப் பார்ப்பதற்குச் சிறந்த நேரம் விடியற்காலை 4 மணியிலிருந்து சூரியன் உதயமாகும் வரை.

ஜூன் மாதம், இதைவிட அரிதான அதிசயம் நடக்கவிருக்கிறது.

புதன், செவ்வாய், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ‌ஏழு கோள்கள் ஒரு பிறைச் சந்திரன் வடிவத்தில் இணையவிருக்கின்றன. ஜூன் 24, 25 ஆகிய தேதிகள் இது நிகழும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!