நாடுகள் பொருளியல்களை ஒருங்கிணைக்க வேண்டும்

நாடுகள் பொருளியல்களை ஒருங்கிணைக்க வேண்டும்

2 mins read
e85cd183-441f-4d81-a8d1-8868c764817b
-

துணைப் பிரதமர்: வலுவான மீட்சிக்கு ஆழமான பங்காளித்துவ உறவுகளும் தேவை

உலக நாடு­கள் உற­வு­களை ஆழப்­படுத்த வேண்­டும். பொரு­ளி­யல்­களை ஒருங்­கி­ணைக்க வேண்­டும்.

இதன்­மூ­லம் கொவிட்-19 தொற்­றில் இருந்து நாடு­கள் வலு­வாக மீட்சி காண முடி­யும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்து இருக்­கி­றார்.

உலக நாடு­கள் ஒன்­றுக்­கொன்று தொடர்­பு­கொண்டு இருக்­கின்­றன, ஒன்­றை­யொன்று சார்ந்து இருக்­கின்­றன என்­ப­தையே கொவிட்-19 தொற்று நினை­வூட்­டி­ய­தா­க திரு ஹெங் கூறினார்.

நாடு­க­ளுக்கு இடை­யில் பிரச்சினை­கள் நில­வி­னா­லும் ஒத்­து­ழைப்­பின் மூலமே வளர்ச்­சி­யை­யும் செழிப்­பை­யும் சாதிக்க முடி­யும் என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும் என்றும் புதன்­கி­ழமை திரு ஹெங் தெரி­வித்­தார்.

ஆகை­யால், ஆசி­யா­வில் உள்ள நாடு­கள் பங்­கா­ளித்­துவ உற­வைப் பலப்­ப­டுத்த வேண்­டும். தங்­கள் பொரு­ளி­யல்­களை ஒருங்­கி­ணைக்க வேண்­டும். ஒளி­வு­ம­றைவு இல்­லாத, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கும் வழியில் அவை இதனைச் சாதிக்க வேண்டும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

வரு­டாந்­திர ஆசி­யா­வுக்­கான 'பாவோ' கருத்­த­ரங்­கில் மெய்­நி­கர் ரீதி­யில் உரை­யாற்­றிய திரு ஹெங், நெருக்­க­டி­யில் இருந்து நாடு­கள் மீண்­டு­ வருவதற்கான மூன்று வழி­களைத் தெரி­வித்­தார்.

வட்­டார பங்­கா­ளித்­துவ உறவை தொடர்ந்து பலப்­ப­டுத்த வேண்­டும் என்பது முதலாவது வழி என்று துணைப் பிரதமர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வட்­டார பரந்த பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு, பசி­பிக் வட்­டா­ரத்­திற்­கான பரந்த ஏறு­முக பங்­கா­ளித்­துவ உடன்­பாடு ஆகிய இரண்­டும் உல­கின் ஆகப் பெரிய பல­த­ரப்பு வர்த்­தக உடன்­பா­டு­கள் என்பதை அவர் சுட்டினார்.

இவை இரண்டும் ஆசி­யாவை மையம் கொண்டு இருக்­கின்­றன என்­பதையும் திரு ஹெங் தமது உரை­யில் குறிப்பிட்டார்.

ஒத்த கருத்­து­டைய நாடு­கள் இந்த ஒத்­து­ழைப்பு ஏற்­பா­டு­களில் சேர்ந்து கொள்­வதைத் தொடர்ந்து தாங்­கள் வர­வேற்­ப­தாக திரு ஹெங் தெரிவித்தார்.

ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து, புருணை, மலே­சியா, ஜப்­பான், வியட்­னாம் ஆகிய நாடு­க­ளு­டன் சேர்ந்து சிங்­கப்­பூ­ரும் இந்த இரண்டு உடன்­பா­டு­களில் இடம்­பெற்று உள்­ளது.

பசி­பிக் வட்­டா­ரத்­திற்­கான பரந்த ஏறு­முக பங்­கா­ளித்­துவ உடன்­பாட்டில் சேர்­வ­தற்கு சீனா­வும் பிரிட்­ட­னும் விண்­ணப்­பித்து இருக்­கின்­றன என்­பதை திரு ஹெங் சுட்­டி­னார்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக வேக­ம­டைந்து இருக்­கும் பொரு­ளி­யல் உரு­மாற்­றங்­களைப் புதிய வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­களாக நாடு­கள் செம்­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்றாரவர்.

மூன்­றா­வ­தாக தங்­க­ளு­டைய பொரு­ளி­யல்­க­ளின் மீள்­தி­றனை நாடு­கள் பலப்­ப­டுத்த வேண்­டும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

அந்­தக் கருத்­த­ரங்கு ஹைனான் தீவில் புதன்­கி­ழமை தொடங்கி வெள்­ளிக்­கி­ழமை வரை நடக்­கிறது.

'கொவிட்-19 தொற்­றின்­போ­தும், அதற்கு அப்­பா­லும் உல­கம்: உலக மேம்­பாடு, பொது­வான எதிர்­கா­லத்­திற்கு ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வது' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் அந்­தக் கருத்­த­ரங்­கம் நடந்­தது.

திரு ஹெங் சிங்­கப்­பூ­ரில் இருந்­த­படி அதில் கலந்­து­கொண்­டார்.

ஆசி­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்சி வாய்ப்­பு­கள் இந்த ஆண்டில் இரண்டு அம்­சங்­களை முக்­கி­ய­மா­கச் சார்ந்­தி­ருக்­கும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 சூழ்­நிலை தொடர்ச்சி, உக்­ரேன் பிரச்­சினை ஆகி­யவை அந்த இரண்டு அம்­சங்­கள் என்­றார் துணைப் பிரதமர்.