ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைச்செலவு நிதிக்கு $20,000 நன்கொடை கிடைத்து இருக்கிறது. டிரான்சிட்லிங்க் நிறுவனத்தின் ஓர் இயக்கத்தின் மூலம் அந்தத் தொகை திரட்டப்பட்டது.
குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் 2000ஆம் ஆண்டில் அந்தக் கைச்செலவு நிதி தொடங்கப்பட்டது.
அது முதல் அந்த நிதி கிட்டத்தட்ட 180,000 சிறார்களுக்கும் இளையர்களுக்கும் $80 மில்லியனுக்கும் அதிக தொகையை வழங்கி உதவி இருக்கிறது.

