உடற்குறையாளர்கள் மேம்பட புதிய பயிற்சிப் படிப்புகள்

உடற்குறையாளர்கள் மேம்பட புதிய பயிற்சிப் படிப்புகள்

1 mins read
5bd63258-4d2e-4e21-af1b-bc8ad7ad8eef
-

உடற்­கு­றை­யா­ளர்­கள் தங்­களை மேம்­ப­டுத்­திக் கொள்ள விரும்­பி­னால் இப்­போது அவர்­கள் இல­வச பயிற்­சிப் படிப்­பு­களில் சேர­லாம்.

மின்­னி­லக்­கப் பாது­காப்பு, விற்­பனை தேர்ச்­சி­கள் போன்ற துறை­களில் அவர்­கள் திற­மை­களை வளர்த்­துக் கொள்­ள­லாம்.

'விஎம்­வேர்' என்ற மென்­பொருள் நிறு­வ­னம் நேற்று புதிய பயிற்­சிப் படிப்­பு­க­ளைத் தொடங்­கி­யது. ஊழி­யர் அணி­யி­டையே மின்­னி­லக்­க­ம­யம் அதி­க­ரித்து வரு­கிறது. இந்த நிலை­யில், உடற்­குறை உள்­ள­வர்­க­ளுக்கு வேலை கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­களை மேம்­ப­டுத்­தித் தரும் நோக்­கத்­துடன் புதிய பயிற்சி படிப்­பு­கள் தொடங்­கப்­பட்டு இருக்­கின்­றன.

'விஎம்­வேர் அரோரா' என்று பெய­ரி­டப்­பட்டு இருக்­கும் அந்­தப் பயிற்­சிப் படிப்­புச் செயல்­திட்­டம், பல்­வேறு தொழில்­துறை பங்­காளி நிறு­வ­னங்­களை எட்­டும். அவற்­று­டன் சேர்ந்து செயல்­படும்.

அடுத்த மூன்­றாண்­டு­களில் உடற்­கு­றை­யு­டன் கூடிய 1,000 பேருக்கு உத­வு­வது அந்­தச் செயல்­திட்­டத்­தின் நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.