பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக்கவசம் தேவை என்று உலகப் புகழ்பெற்ற தொற்று நோய்த் துறை வல்லுநர்களில் ஒருவர் கூறினார்.
விமானங்கள், பேருந்துகள், லண்டனின் சுரங்க ரயிலில் போகும்போது தொடர்ந்து தான் முகக்கவசத்தை அணியப்போவதாக சர் பீட்டர் பியோட், 73, என்ற அந்த வல்லுநர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி பல மாதம் சிகிச்சை பெற்று மீண்டவரான பேராசிரியர் பியோட், கொவிட்-19 தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவருக்கு ஆலோசனை கூறும் சிறப்பு வல்லுநராவார். அவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியருமாவார்.

