'டிஓசி' ஆசிரியர், கட்டுரையாளருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை

'டிஓசி' ஆசிரியர், கட்டுரையாளருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை

1 mins read
da263f15-491c-4911-94b0-0ecba1f1a32b
'டிஓசி' இணையத்தள உரிமையாளர் டெர்ரி சு (இடது), கட்டுரையாளர் டி கோஸ்டா இருவருக்கும் மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' (டிஓசி) இணை­யத்­த­ளத்­தின் ஆசி­ரி­யர் டெர்ரி சு எனப்­படும் சு யுவான்­சென், அதன் கட்­டு­ரை­யா­ளர் டேனி­யல் டி கோஸ்டா அகஸ்­டின் இரு­வ­ருக்­கும் நேற்று மூன்று வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் அமைச்­சர்­கள்­மீ­தான அவ­தூ­றுத் தக­வல்­களை எழுதி, வெளி­யிட்­ட­தை­ய­டுத்து இவர்களுக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கட்­டு­ரை­யா­ளர் டி கோஸ்­டா­விற்கு கணி­னி­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ரான சட்­டத்­தின்­கீழ் மேலும் மூன்று மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இரண்டு தண்­ட­னை­க­ளை­யும் அடுத்­த­டுத்து நிறை­வேற்ற அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு நவம்­ப­ரில் இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

2018ஆம் ஆண்டு, "மசெக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிஜ­க­வி­டம் மன்­னிப்­புக் கோரி­னார்" எனும் தலைப்­பில் டி கோஸ்டா மின்­னஞ்­சல் அனுப்­பி­னார்.

சிங்­கப்­பூர் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களை அவ­ம­திக்­கும் அந்த மின்­னஞ்­ச­லைத் தனது நண்­ப­ரின் கணக்­கில் இருந்து 'டிஓசி'க்கு அவர் அனுப்­பி­னார்.

மசெக தலை­மைத்­து­வத்­தில் பெரிய ஊழல் நில­வு­வ­தா­கக் கூறிய அந்த மின்­னஞ்­சல் பின்­னர் 'டிஓசி' இணை­யத்­த­ளத்­தில் பதி­வி­டப்­பட்­டது.

அவ­தூறு பரப்­பி­யோ­ருக்கு ஈராண்டு சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.