அரசாங்க வேலைவாய்ப்புகளை அனுமதியின்றி பதிவிட்ட இணையத்தளம்

அரசாங்க வேலைவாய்ப்புகளை அனுமதியின்றி பதிவிட்ட இணையத்தளம்

1 mins read
3bd35fb5-eb5f-4709-82b1-a914c4c4997d
-

அர­சாங்க வேலை­வாய்ப்பு குறித்த தக­வல்­க­ளுக்­கான 'கரி­யர்ஸ் அட் கவ்' இணை­ய­வா­ச­லில் இருந்து வேலை­வாய்ப்பு விவ­ரங்­களை நக­லெ­டுத்து மோசடி இணை­யத்­த­ளம் ஒன்­றில் பதி­வி­டப்­பட்­டி­ருப்­ப­தாக பொதுச் சேவைப் பிரிவு தெரி­வித்­தது.

இதன் தொடர்­பில் 'ஜாப்­சிங்­கப்­பூர்25எச்.காம்' எனும் இணை­யத்­தளத்­தின்­மீது காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­தி­ருப்­ப­தாக அது கூறி­யது.

இணை­யத்­தள உரி­மை­யா­ள­ரைத் தொடர்­பு­கொண்டு அர­சாங்­கப் பணி தொடர்­பான அனைத்து விளம்­ப­ரங்­க­ளை­யும் அகற்­றும்­படி கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் பொதுச் சேவைப் பிரிவு குறிப்­பிட்­டது.

வேலை தேடு­வோர் அர­சாங்­கப் பணி­க­ளுக்கு விண்­ணப்­பிக்க விரும்­பி­னால் 'கரி­யர்ஸ் அட் கவ்' இணை­ய­வா­சல் அல்­லது வேலைக்கு ஆள் எடுக்­கும் நிறு­வ­னங்­க­ளின் இணை­யத்­த­ளங்­கள் மூல­மாக மட்­டுமே விண்­ணப்­பிக்க வேண்­டும் என்­பதை அது நினை­வு­றுத்­தி­யது.

தங்­க­ளது தனிப்­பட்ட தக­வல்­களையோ தனிப்­பட்ட விவ­ரக் குறிப்­பையோ அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத தளங்­களில் சமர்ப்­பிக்க வேண்­டாம் என்று வேலை தேடு­வோ­ருக்கு ஆலோ­சனை கூறப்­பட்­டது.

இவ்­வாறு செய்­வ­தால் மோசடி, தக­வல் திருட்டு, அடை­யாள விவ­ரங்­கள் திரு­டப்­ப­டு­தல் போன்­ற­வற்­றுக்கு வழி­வ­குக்­கக்­கூ­டும் என்று பொதுச் சேவைப் பிரிவு சுட்­டி­யது.

வேலை­வாய்ப்­பு­கள் குறித்த சந்­தே­கம் ஏதும் இருந்­தால் சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப்­பி­டமே அதை தெளி­வு­ப­டுத்­திக் கொள்­ளும்­படி வேலைதேடுவோருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.