போதைப்பொருளை பழக்கியவரை குத்திய ஆடவருக்குச் சிறை

போதைப்பொருளை பழக்கியவரை குத்திய ஆடவருக்குச் சிறை

1 mins read
085b959a-91e7-4d29-95cf-5ea27554f121
-

தன்­னு­டன் ஒரே வீட்­டில் தங்­கி­யி­ருந்த ஆட­வரை குக்ரி கத்­தி­யால் குத்­திய டியோ கோக் யுங்­கிற்கு ஓராண்டு, பத்து மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­தி­யது, போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தி­யது ஆகிய இரண்டு குற்­றச்­சாட்டு­க­ளை­யும் 35 வயது டியோ ஒப்­புக்­கொண்­டார். தண்­டனை விதிக்­கும்­போது மேலும் ஒரு குற்­றச்­சாட்­டும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­ட­தாக நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

ஆட­வர் போதைப்­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­தப் பழக்­கி­விட்­ட­தால் அவர்­மீது கோப­ம­டைந்­த­தா­க­வும் பழி­வாங்க நினைத்­துக் குத்­தி­ய­தா­க­வும் டியோ கூறி­னார். ஆனால் ஆட­வ­ரைக் கொல்­வது தமது நோக்­க­மல்ல என்­றார் அவர்.

சம்­ப­வத்­தில் காய­ம­டைந்த ஆட­வ­ருக்கு நெஞ்சு, முதுகு, வயிறு, முகம் உள்­ளிட்ட இடங்­களில் காயம் ஏற்­பட்­ட­து­டன் நுரை­யீ­ர­லும் செய­லி­ழந்­தது.

அபா­ய­க­ர­மான ஆயு­தத்­தால் தாக்­கிய குற்­றத்­துக்கு டியோ­விற்கு பத்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­திய குற்­றத்­திற்கு ஓராண்­டிற்­கும் பத்து ஆண்­டு­க­ளுக்­கும் இடை­யி­லான சிறை­யு­டன் இரு­ப­தா­யி­ரம் வெள்ளி வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.