எஸ்எம்யு: புதிய $3 மி. கல்வி உதவித்தொகை

எஸ்எம்யு: புதிய $3 மி. கல்வி உதவித்தொகை

1 mins read
2f38e10a-8a36-42a7-8308-c4ba36410183
தகுதிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்குப் பத்தாயிரம் வெள்ளி நிபந்தனையற்ற கல்வி உபகாரச் சம்பளமாக வழங்கப்படும். படம்: சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் -

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (எஸ்­எம்யு) பயி­லும் வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­கான புதிய கல்வி உத­வித்­தொகை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சமூ­கப் பங்­க­ளிப்­பி­லும் கல்­வி­யி­லும் சிறந்து விளங்­கும் மாண­வர்­கள் 'ஜேஎல்எஃப்ஓ-எல்எச்எஃப்' கல்வி உதவித் தொகைக்குத் தகு­தி­பெ­று­வர்.

மூன்று மில்­லி­யன் வெள்ளி மதிப்­பு­மிக்க இந்த கல்வி உத­வித்­தொ­கையை லிம் ஹூன் அற­நிறுவனம் வழங்­கு­கிறது. ஜேஎல் குடும்ப அலுவலகத்தின்கீழான தனியார் அறநிறுவனம் அது.

இந்த கல்வி உதவித்தொகையின் ­மூ­லம் பெறும் தொகையை மாண­வர்­கள் தங்களது வரு­டாந்­தர கல்­விக் கட்­ட­ணத்­தைச் செலுத்­த­வும் கல்வி சார்ந்த இதர செல­வு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

தகு­தி­பெ­றும் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும், பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் நான்கு ஆண்­டு­க­ளுக்­கும் ஆண்­டுக்­குப் பத்­தா­யி­ரம் வெள்ளி நிபந்­த­னை­யற்ற கல்வி உப­கா­ரச் சம்­ப­ள­மாக வழங்­கப்­படும்.

முத­லில் இந்த ஆண்டு ஒன்­பது மாண­வர்­க­ளுக்கு இந்­தக் கல்வி உத­வித்­தொகை வழங்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

பல்­க­லை­யில் தற்­போது பயி­லும் மாண­வர்­களும் வரும் ஆகஸ்ட் மாதம் பட்­டப் படிப்­பைத் தொடங்க இருக்­கும் புதிய மாண­வர்­களும் இவர்­களில் அடங்­கு­வர்.

எதிர்­வ­ரும் ஆண்­டு­களில் கல்வி உத­வித்­தொகை பெறும் மாண­வர்­களின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக உயர்த்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்எச்எஃப் அறநிறுவனத்தின் இயக்குநர் திரு ஏண்டி லிம், மூன்று மில்லியன் வெள்ளிக்கான காசோலையை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் தலைவர் லில்லி கோங்கிடம் வழங்கினார். சிறந்த எதிர்காலத்திற்கு கல்வியே அடிப்படை என்று நம்புவதாக திரு லிம் கூறினார்.