எரியும் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட14 பூனைகளின் உயிரைக் காப்பற்ற முதலுதவி அளித்தனர் சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள்.
புக்கிட் பஞ்சாங்கில் அமைந்துள்ள ஃபாஜார் ரோட்டு புளோக் 422ல் ஒரு வீட்டில் தீச் சம்பவம் குறித்து படைக்கு அழைப்பு வந்தது.
தீயை அணைத்த பிறகு, அந்த இரண்டு மாடி வீட்டில் 14 பூனைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் மயக்கநிலையில் இருந்தன. தீயணைப்பாளர்கள் அவற்றுக்கு முதலுதவி அளித்தனர். முயற்சி பலனளித்தது. 14 பூனைகளில் 13 உயிர்ப் பிழைத்தன. ஒன்று மட்டும் மடிந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 அண்டை வீட்டுக்காரர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பாளர்கள் பூனைகளுக்கு முதலுதவி அளிக்கும் காணொளியை ஒருவர் தம்முடைய டிக்டாக் பக்கத்தில பதிவேற்றம் செய்துள்ளார்.


