பெரும்பாலான இடங்களில் ‘டிரேஸ்டுகெதர்’ தேவைப்படாது

தடுப்­பூசி போட்டுக்கொள்ளா தோருக்கான மாறு­பட்ட பாது­காப்பு நிர்­வாக விதி­மு­றை­கள் பெரும்­

பா­லான இடங்­களில் ஏப்­ரல் 26ஆம் தேதி முதல் தேவைப்­ப­டாது.

ஆனால், பெரிய நிகழ்­வு­கள், உணவு, பானக் கடை­கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்­களில் அதிக அபா­யம் இருப்­ப­தால் அவற்­றுக்கு அத்­த­கைய ஏற்­பா­டு­கள் தொடர்ந்து இருக்­கும்.

உல­கில் அதிக தடுப்­பூசி போட்டுக்கொண்டோரின் விகி­தத்­தைக் கொண்­டுள்ள நாடு­களில் ஒன்­றான சிங்­கப்­பூ­ரில் கிரு­மிப்­

ப­ர­வல் குறைந்­து­வ­ரும்­ நிலையில் இந்த அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று அல்­லாத நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யைச் சமா­ளிக்க மருத்­து­வ­ம­னை­களுடன் சுகா­தாரப் பணி­யா­ளர்­களும் செயல்­பட்டு வரு­கின்­றனர். கொவிட்-19 கிரு­மி­யால் கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­ட­வர்­கள் அல்­லது மர­ணம் அடைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். எனவே அவர்­

க­ளுக்­கும் தடுப்­பூசி போட்டுக் கொண்டோருக்கும் தனித்­தனி விதி­மு­றை­கள் அமைக்­கப்­பட்­ட­தாக நேற்­றைய அமைச்சுகள்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்தியாளர் கூட்டத்தின்போது சுகா­தார

அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார்.

மருத்­து­வ­ம­னை­கள் அதிக நெருக்­க­டி­யைச் சந்­தித்­துள்ள நேரத்­தில் சுகா­தா­ரத்­து­றை­யில் அதிக வேலைப் பளு இல்­லா­மல் இருப்­பதை இந்­தப் பாது­காப்பு நடை­முறை உறுதி செய்­கிறது. ஒன்­று­கூடி ஆடும் வச­தி­க­ளைக் கொண்­டுள்ள கேளிக்கை இடங்­கள் போன்ற அதிக அபா­யம் உள்ள இடங்­களில் இந்த மாறு­பட்ட விதி­மு­றை­கள் தொடர்ந்து நடப்பில் இருக்கும். குறைந்­தது 500 பங்­கேற்­பா­ளர்­கள் உள்ள பெரிய நிகழ்ச்சி­கள், திரு

­ம­ணங்­கள், மாநா­டு­கள் உள்­ளிட்ட இடங்­களில் கிருமி வேக­மா­கப் பர­வும் அபாயம் உள்­ள­தால் அங்கு, இரண்டு பிரிவு­க­ளைச் சேர்ந்­தோ­ருக்கு தனித்­தனி விதி­மு­றை­கள் செயல்­ப­டுத்­தப்­படும் என்று திரு ஓங் கூறி­னார். உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்பிக் கடை­கள், உண­

வ­கங்­கள் போன்ற உணவு, பான நிறு­வ­னங்­களில் அவை தொடர்ந்து செயல்­படும் என்று தெரி­வித்­தார். ஆயி­னும், இக்­க­டை­களே தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சோதிக்க வேண்டி­ய­தில்லை. அந்த இடங்­களில் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்டுக்கொண்டோர்் மட்­டும்­தான் உள்­ள­னர் என்­பதை உறுதி செய்ய திடீர் சோத­னை­கள் நடத்­தப்­படும்.

வேலை­யி­டத்­தி­லும் தடுப்­பூசி தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும். ஏப்­ரல் 26ஆம் தேதி முதல் கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் நெருங்­கிய தொடர்பு உள்­ளோ­ருக்கு சுகா­தார அபாய அறி­விப்­பு­களை வழங்­கு­வதை சுகா­தார அமைச்சு நிறுத்­தும். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட தனி­ந­பர்­கள், வீட்­டில் உள்­ள­வர்­

க­ளின் தொடர்பு எண்­களை இணை­யம் மூலம் அனுப்­பு­வ­தற்­கான தேவை­யும் இருக்­காது. ஆயி­னும் இவர்­கள் தொடர்ந்து சமூ­கப் பொறுப்­பு­டன் செய­லாற்றி, தாங்­க­ளா­கவே நெருங்­கி­யோ­ரி­டம் பாது­காப்­பு­டன் இருக்­கும்­படி கூற­வேண்­டும் என்­றது அமைச்சு.

'டிரேஸ்­டு­கெ­தர்' குறி­யீட்டை வருடி நுழை­யும் முறை பெரும்­பா­லான இடங்­களில் இருக்­காது ஆயி­னும், புதிய கிருமி உரு­மாற்­றங்­கள் ஏற்­பட்­டால் அத­னைச் சமா­ளிக்க 'டிரேஸ்­டு­கெ­தர்' செய­லி­யைத் தொடர்ந்து வைத்­தி­ருக்­கும்­படி

கேட்­டுக்­கொள்­ளப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!