'கொவிட்-19 உருமாற்றங்கள் குறித்து கவனமாக இருக்கவும்'

'கொவிட்-19 உருமாற்றங்கள் குறித்து கவனமாக இருக்கவும்'

2 mins read
f1150d06-a677-4bf5-8b9c-d9489388a1fa
-

கொவிட்-19 தொடர்­பி­லான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த சிங்­கப்­பூர் உறு­தி­யா­கச் செயல்­பட்டு வந்­தா­லும் அபா­யங்­கள் குறித்த விழிப்­பு­நிலை தேவைப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். இத­னால் கிரு­மிப்­ப­ர­வல் முற்­றி­லும் இல்லாமல் ஆகும்வரையில் சிங்கப்பூர் 'விடுதலை'யை அறி­விக்­காது என்று திரு ஓங் கூறி­னார்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ள் குறைக்­கப்­பட்­டா­லும் அவை முற்றிலும் அகற்றப்படவில்லை என்­பதே உண்மை. இத­னைத் திரு ஓங், நேற்று அமைச்சுகள்நிலை பணிக்­குழுவின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

சில நாடு­களில் ஓமிக்­ரான் அலை மீண்­டும் எழும் அபா­யம் உள்­ளது. மூல ஓமிக்­ரான் வகை­யான பிஏ.1உடன் தொடர்­பு­டைய ஓமிக்­ரான் பிஏ2 வகை­யால்

அமெ­ரிக்­கா­வி­லுள்ள சில பகு­தி­களில் புதிய அலை திரும்­பு­கிறது.

ஆயி­னும், ஏற்­கெ­னவே பிஏ.2 வகை இங்கு ஓமிக்­ரான அலையை ஏற்­ப­டுத்தி இருந்­த­தால் இது சிங்­கப்­பூ­ருக்கு அவ்­வ­ளவு அக்­க­றைக்­கு­ரிய ஒன்­றாக இல்லை என்­றார் திரு ஓங்.

ஆயி­னும், புதி­தாக உரு­மா­றி­உள்ள கிரு­மி­யின் தோற்­றம்

கவ­லைக்­கு­ரி­ய­தாக இருக்­கும்.

"இது தொடர்ந்து நமக்­குச் சவா­லாக இருக்­கும். இத­னால் நாம் மீண்­டும் ஆரம்பநிலைக்­குத்

தள்­ளப்­ப­ட­லாம்.

"எனவே நாம் பாது­காப்­பாக இருந்து, மெத்­த­னத்­து­டன் இருந்­தி­ரா­த­படி பார்த்­துக்­கொண்டு வருங்­கால சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­காக தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டும்," என்­றார் திரு ஓங்.

புதிய உரு­மா­றிய கிரு­மி­க­ளால் கடு­மை­யான நோய்­கள் அல்­லது மர­ணங்­கள் அதிக அள­வில் ஏற்­

ப­டுமா என்­ப­தை­யும் அக்­கி­ரு­மி­

க­ளின் தொற்று வேகம் அதி­க­மாக இருக்­குமா என்­ப­தை­யும்

அதி­கா­ரி­கள் உற்று கவ­னிப்­பர் என்­றும் அவர் கூறி­னார்.