அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அந்நாட்டு உயர் அதிகாரிகளை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு, பொருளியல் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவனை வெள்ளை மாளிகையில் திரு வோங் சந்தித்தார். உலகளாவிய மேம்
பாடுகள், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு ஆகியவை குறித்து இருவரும் வெளிப்படையாகக் கலந்துரையாடினர்.
இந்தத் தகவலை அமைச்சர் வோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா ராய்மோண்டோவையும் சந்தித்த திரு வோங், பணவீக்கத்தைச் சமாளிக்க நடைமுறைப்படுத்தக்கூடிய பல்வேறு உத்திகளைப் பற்றி அவருடன் கலந்துரையாடினார்.

