மீண்டும் சிங்கப்பூர்-மலேசியா டாக்சி, பேருந்துச் சேவைகள்

மீண்டும் சிங்கப்பூர்-மலேசியா டாக்சி, பேருந்துச் சேவைகள்

1 mins read
e383028e-f44c-4b2d-b46e-7866c5b8179e
-

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான டாக்சி மற்­றும் பொதுப் பேருந்­துச் சேவை­கள் வரும் மே மாதம் 1ஆம் தேதி­

யி­லி­ருந்து மீண்­டும் தொடங்க இருக்­கின்றன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக இரண்டு ஆண்­டு­

க­ளுக்­கும் மேலாக இந்­தச் சேவை­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டன.

எஸ்­பி­எஸ் நிறு­வ­னத்­தின் பேருந்து எண் 160, 170, 170X ஆகி­ய­வற்­று­டன் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் 950 பேருந்­துச் சேவை­யும் டிரான்ஸ்­டார் டிரா­வல் நிறு­வ­னத்­தின் TS1, TS3, TS6, TS8 பேருந்­துச் சேவை­யும் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான பய­ணச் சேவையை வழங்­கும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று அறி­வித்­தது. இதற்­காக இந்த மூன்று நிறு­வ­னங்­களும் கூடு­தல் பேருந்து ஓட்டுநர்­களை வேலை­யில் அமர்த்தி பயணப் பாதை குறித்து அவர்­க­ளுக்­குத் தேவை­யான பயிற்சிகளை அளித்து வரு­கின்­றன.