வீட்டு விலை உயர்வு மெதுவடைந்தது

வீட்டு விலை உயர்வு மெதுவடைந்தது

2 mins read
ca14fd70-aec9-485f-8376-a1884dedb6b2
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் விலை­கள் 2.4 விழுக்­காடு உயர்ந்­தன.

இதற்கு முந்­திய காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் மெது­வான வேகத்­தில் விலை­கள் உயர்ந்­த­தாக கழ­கம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

இதற்கு முந்­திய காலாண்­டான, கடந்த ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் இதைக் காட்­டி­லும் ஒரு விழுக்­காடு, அதா­வது 3.4 விழுக்­காடு மறு­விற்­பனை விலை­கள் அதி

­க­ரித்­தன.

கடந்த ஆண்டு முழு­மைக்­கும் விலை­க­ளின் ஏற்­றம் தொடர்ந்­தது. ஆண்­டின் மொத்த உயர்வு விகி­தம் 12.7 விழுக்­காடு என பதி­வா­னது. 2010ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆண்டு முழு­வ­தும் தொடர்ச்­சி­யாக விலை­கள் வேக­மாக உயர்ந்­தது கடந்த ஆண்­டில்­தான்.

சொத்­துச் சந்­தை­யின் வேகத்­தைத் தணிக்­க­வும் அதி­கப்­ப­டி­யான நிதி விவே­கத்தை ஊக்­கு­விக்­க­வும் கடந்த ஆண்­டின் இறு­தி­வாக்­கில் புதி­தாக நட­வ­டிக்­கை­கள் அறி

­மு­கம் செய்­யப்­பட்­டன.

அப்­போது முதல் விலை­க­ளின் ஏற்­றம் மெது­வ­டைந்­தது. அதே­போல மறு­விற்­பனை வீவக வீடு­க­ளின் விற்­ப­னை­யி­லும் சுணக்­கம் காணப்­பட்­டது.

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் 6,934 வீவக வீடு­கள் மறு­விற்­

ப­னைச் சந்­தை­யில் கைமா­றின. கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் விற்­பனை ஆன 7,940 வீடு­க­ளைக் காட்­டி­லும் இது 12.7 விழுக்­காடு குறைவு.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 8.5 விழுக்­காடு குறை­வான பரி­வர்த்தனை நிகழ்ந்­துள்­ளது.

2021 முதல் காலாண்­டில் 7,581 வீடு­கள் மறுவிற்­ப­னைச் சந்­தை­யில் விற்­கப்­பட்­டன.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் விலை உயர்­வின் விகி­தம் குறைந்­தா­லும் எட்­டா­வது காலாண்­டாக விலை உயர்வு தொட­ர்ந்தது. வேகம் குறைந்­தி­ருப்­பது அடுத்­த­டுத்த உயர்­வில் முட்­டுக்­கட்டை ஏற்­படும் சாத்­தி­யத்தை உணர்த்தி இருப்­ப­தாக சொத்­துச் சந்தை பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­தக் காலாண்­டின் விலை உயர்வு விகி­தம் (2.4%) 2020ஆம் ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்­குப் பிற­குப் பதி­வான ஆகக் குறை­வான வளர்ச்சி என்று ஆரஞ்­சுடீ அண்ட் டை சொத்து நிறு­வ­னத்­தின் ஆராய்ச்சி மற்­றும் பகுப்­பாய்­வுப் பிரி­வின் மூத்த துணைத் தலை­வர் திரு­வாட்டி கிறிஸ்­டின் சன் கூறி­னார். 2020 மூன்­றாம் காலாண்­டில் 1.5 விழுக்­காடு விலை உயர்வு காணப்­பட்­டது.

வட்டி விகி­தங்­கள் உய­ரும் சாத்­தி­யம் இருப்­ப­தா­லும் பண­வீக்­கம் அதி­க­ரிப்­ப­தா­லும் இவ்­வாண்டு விலை உயர்­வில் வேகம் இருக்­காது என்­றும் வீடு­களை வாங்க விரும்­பு­வோர் அதி­கத் தொகை தர முன்­வ­ராத போக்கு காணப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

வீவக மறுவிற்பனைச் சந்தையின் முதலாம் காலாண்டு நிலவரம்