$13 மில்லியன் செலவில் உணவு புத்தாக்க வசதிப் பகிர்வுக்கூடம்

2 mins read
067710b8-f92c-4bd9-80ec-c75176952f1f
'ஃபுட்பிளாண்ட்' எனப்படும் சிங்கப்பூரின் முதலாவது உணவு புத்தாக்கப் பகிர்வுக் கூடத்தில் இயந்திரம் ஒன்றின் செயல்பாட்டை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலமிருந்து இரண்டாவது) பார்வை யிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உண­வுப் பொருள்­க­ளின் உற்­பத்­திக்­கும் புத்­தாக்­கத்­திற்­கும் உள்­ளூர் சிறிய நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் நோக்­கில் $13 மில்­லி­யன் செலவில் வச­திப் பகிர்வுக்­கூ­டம் ஒன்று தொடங்­கப்­பட்டுள்­ளது.

செனோக்கோ டிரைவ்­வில் 1,107 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் உரு­வாக்­கப்­பட்டு உள்ள 'ஃபுட்பி­ளாண்ட்' எனப்­படும் அந்த வச­திக்­கூ­டத்தை சிறிய உணவு தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம்.

பொருள்­க­ளைச் சோதிப்­ப­தற்­காக சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­ப அவை கட்­ட­ணம் செலுத்­த­லாம். இதே வச­தி­க­ளைப் பெற அத்­த­கைய சிறிய நிறு­வ­னங்­கள் பெரும் முத­லீடு செய்ய வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டாது. இதன் மூலம் சிங்­கப்­பூ­ரில் உள்ள சுமார் 200 உண­வுத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பய­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன் வரும் 2026ஆம் ஆண்­டுக்­குள் குறைந்­த­பட்­சம் 400 புதிய உண­வுத் தயா­ரிப்­பு­களை மேற்­கொள்ள இந்த வச­திப் பகிர்வுக்­ கூ­டம் கைகொ­டுக்­கும் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

எஸ்­ஐடி எனப்­படும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம், எண்­டர்­

பி­ரைஸ் சிங்­கப்­பூர், ஜூரோங் நக ராண்மைக் கழகம் ஆகி­யன கூட்­டாக 'ஃபுட்பி­ளாண்ட்' புத்­தாக்க வச­திக்­கூ­டத்­தைத் தொடங்கி உள்­ளன. சிங்­கப்­பூ­ரின் உண­வுத்­து­றைப் புத்­தாக்­கத்­திற்கு இது பெரி­தும் கைகொ­டுக்­கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதன் தொடக்க நிகழ் வில் பங்கேற்ற துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், புதிதாக நிறுவப் பட்டுள்ள இயந்திரங்களின் செயல் திறனை சோதித்துப் பார்த்தார்.

இங்­குள்ள சாத­னங்­களை நிறு ­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­ லாம். ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்­சிக்­கான ஆலோ­ச­னைச் சேவை­களை அவை பெற­லாம். மேலும், உண­வுப் புத்­தாக்­கத்­திற்­கான திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­யில் நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்­தோர் கலந்து­கொள்­ள­லாம். சிறிய அள­வி­லான புதிய உண­வுப் பொருள்­களை சோதித்­துப் பார்க்­க­வும் பய­னீட்­டா­ளர்­க­ளின் விருப்­பத்தை அறிய அவற்­றைச் சந்­தை­யில் விற்­க­ வும் வச­திக்­கூ­டத்தை நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இந்த வச­திக்­கூ­டத்­திற்கு சிங்­கப்­பூர் உணவு அமைப்பு உரி­மம் வழங்கி இருப்­ப­தால் இங்கு தயா­ரிக்­கப்­படும் உண­வுப் பொருள்­களை வர்த்­தக ரீதி­யாக விற்­பனை செய்­ய­லாம்.