டிசம்பர் மாதம் சொத்துச் சந்தை வேகத் தணிப்பு நடவடிக்கைகள் அறிமுகம் கண்ட பின்னர் தனியார் வீடமைப்புச் சந்தையில் விலை உயர்வு 0.7 விழுக்காடு எனப் பதிவானது.
இது தொடர்ச்சியான எட்டாவது காலாண்டு விலை உயர்வு. இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையில் 0.4 விழுக்காடு விலை உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டதைக் காட்டிலும் இது அதிகம்.
ஆயினும், கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடு கையில் இந்த விலை உயர்வு பெரிய இறக்கத்தைச் சந்தித்துள்ளது. அந்தக் காலாண்டில் 5 விழுக்காடு விலை உயர்வு காணப்பட்டது.
புதிய தனியார் வீடுகளின் விற்
பனையும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு குறைந்தது.
மொத்தம் 1,825 வீடுகள் விற்கப்பட்டன. இதற்கு முந்திய காலாண்டில் 3,018 வீடுகள் கைமாறின. இந்த எண்ணிக்கையில்
எக்ஸிக்யூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் சேர்க்கப்படவில்லை.
புதிய நடவடிக்கைகள் அறி
முகம் கண்ட பின்னர் வெளிநாட்டினரும் முதலீட்டாளர்களும் தனியார் வீடுகளை வாங்குவதைத் தவிர்த்து வருவதையே இது காட்டு வதாக சொத்துச் சந்தை பகுப்பாய் வாளர்கள் கூறுகின்றனர்.
தேவை அடிப்படையிலான விலை ஏற்றம் என்பது இனி செலவு அடிப்படையிலான விலை ஏற்றமாக மாறக்கூடும் என்று ஆரஞ்சுடீ அண்ட் டை சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சன் குறிப்பிட்டார்.
"ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாகவும் அதன் தொடர்பிலான பொருளியல் தடை காரணமாகவும் எரிசக்தி, எஃகு, மூலப்பொருள்கள் ஆகியவற்றின் விலையும் இறக்குமதி செலவுகளும் அதிகரித்துவிட்டன.
"கட்டுமானச் செலவு உயர்வில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம்," என்றார் அவர்.

