அதிகமாக உயர்ந்த வீட்டு வாடகை

தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­க­ளின் வாடகை இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் படு­வே­கத்­தில் உயர்ந்­தது. கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் 2.7 விழுக்­கா­டாக இருந்த அந்த உயர்வு இவ்­வாண்­டில் 4.1 விழுக்­காட்­டுக்­குச் சென்­றது. முதன்மை

வட்­டா­ரத்­தில் 3.8 விழுக்­கா­டும் நக­ரப் பகு­தி­களில் 4.7 விழுக்­கா­டும் வாடகை உயர்வு பதி­வா­னது.

அதே­நே­ரம் புற­ந­கர்ப் பகு­தி­களில் வாடகை உயர்வு 4 விழுக்­கா­டாக அது இருந்­தது என நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. தனி­யார் தரை வீடு­

க­ளின் வாடகை 5.3 விழுக்­காடு உயர்ந்­தது. இதற்கு முந்­திய காலாண்­டைக் காட்­டி­லும் இது 1.2 விழுக்­காடு அதி­கம். தனி­யார் வீடு­களை வாங்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தோர் டிசம்­பர் மாதம் அறி­மு­கம் கண்ட புதிய நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பின்­னர் வாட­கைச் சந்­தையை நாடி­னர்.

அதன் கார­ண­மாக வாடகை வீடு­க­ளுக்­கான தேவை அதி­

க­ரித்­த­தால் வாடகை உயர்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. "இரண்­டா­வது சொத்தை வாங்க விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான கூடு­தல் முத்­தி­ரைக் கட்­ட­ணம் 12 விழுக்­காட்­டி­லி­ருந்து 17 விழுக்­காட்­டுக்கு உயர்த்­தப்­பட்­ட­தால் சில வீட்டு உரி­மை­யா­ளர்­

க­ளுக்கு முத­லீட்டு சிக்­கல் ஏற்­பட்­டி­ருக்­க­லாம்.

"அத­னால் முதல் சொத்தை விற்ற பின்­னர் சிறிது காலம் வாடகை வீட்­டில் தங்­க­வேண்­டிய நிலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்டு இருக்­க­லாம்," என்று இஆர்ஏ சிங்­கப்­பூர் சொத்­துச் சந்­தை­யின் ஆராய்ச்சி மற்­றும் ஆலோ­ச­னைப் பிரி­வின் தலை­வர் நிக்­க­லஸ் மாக் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!