அலுவலக வாடகையும் அதிகரிப்பு

அலுவலக வாடகையும் அதிகரிப்பு

1 mins read
b999c02a-16e0-41e5-ad72-9ecce78e1f9d
-

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் அலுவலக இடங்களின் வாடகை, காலாண்டு அடிப்படையில் 1.6 விழுக்காடு ஏற்றம் கண்டது. முந்திய காலாண்டில் இது 0.9 விழுக்காடு உயர்ந்த தாக நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. முந்திய காலாண்டில் ஆணை யத்தின் அலுவலக இடங்களுக்கான மத்திய வட்டார விலைக் குறியீடு 1.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. இந்தக் காலாண்டில் அது 4.4 விழுக்காடு உயர்ந்து உள்ளது.

நிரப்பப்படாத அலுவலக வாடகை இடங்கள் கடந்த காலாண்டைப் போலவே இந்தக் காலாண்டிலும் 12.8 விழுக்கா டாகத் தொடர்ந்தது. அதேநேரம் வாடகைக்கு எடுக்கப்பட்ட அலுவலக இடங்களின் அளவு இந்தக் காலாண்டில் 13,000 சதுர மீட்டர் என பெரிய அளவில் சுருங்கியது. முந்திய காலாண்டில் இதைக் காட்டிலும் 10,000 சதுர மீட்டர் அதிக மாக, அதாவது 23,000 சதுர மீட்டர் அலுவலக இடங்கள் வாடகைக்கு விடப்பட்டன.