காற்றாலை மின் திட்டங்களில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு உதவி

காற்றாலை மின் திட்டங்களில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு உதவி

1 mins read
d4f8d4fa-8847-4746-8f53-a0f64b5a973d
-

நீடித்து நிலைக்­கக்­கூ­டிய காற்­றாலை எரி­சக்­தித் திட்­டங்­க­ளுக்கு உரு­மாற விரும்­பும் கடல்­துறை மற்­றும் கட­லோர பொறி­யி­யல் நிறு­வ­னங்­கள் இனி அதிக வழி­காட்­டு­தல்­க­ளைப் பெற­லாம்.

வர்த்­த­கம் கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு முந்­திய நிலையை படிப்­ப­டி­யாக எட்­டி­வ­ரும் நிலை­யில் கடல்­துறை, கட­லோ­ரப் பொறி

­யி­யல் துறை அதற்கு முக்­கிய படி­யாக விளங்­கு­கிறது. இத்துறைக்கு உதவ புதிய திட்­டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டுள்­ள­தாக சிங்­கப்­பூர் கடல்­து­றைத் தொழிற்­கூ­டச் சங்­கம் நேற்று கூறி­யது.

புதிய அம்­சங்­கள் தொடர்­பான வாய்ப்­பு­களை நிறு­வ­னங்­கள் சரி­வரப் புரிந்­து­கொள்­வ­தற்கு இத்­திட்­டம் உத­வும் என்­றது சங்­கம். கட­லோர காற்­றா­லைத் திட்­டங்­களை உரு­வாக்கி நடத்­து­வது எப்­படி என்­ பதை விளக்­கு­வ­தற்­கான பயிற்சி வகுப்பு ஒன்­று 26 பொறி­யா­ளர்­கள், வர்த்­தக வளர்ச்சி நிர்­வா­கி­கள் மற்­றும் செயல்­பாட்டு மேலா­ளர்­கள் ஆகி­யோ­ரு­டன் இணைந்து ஏற் படுத்தப்பட்டுள்ளது.