'சிபிஆர்' மூலம் காப்பாற்றப்பட்ட 13 பூனைகள்; ஒன்று மரணம்

'சிபிஆர்' மூலம் காப்பாற்றப்பட்ட 13 பூனைகள்; ஒன்று மரணம்

1 mins read
cd0d682c-946f-4ed2-8450-0dad2ef6884a
தீப்பிடித்த வீட்டுக்குள் மயங்கிக் கிடந்த பூனைகளைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தீயணைப்புப் படையினர். படம்: சமூக ஊடகம் -

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 14 பூனைகள் மீட்கப்பட்டன. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவற்றுக்கு சிபிஆர் எனப்படும் இதய இயக்க மீட்பு உதவி செய்யப்பட்டது. இருப்பினும் ஒரு பூனையைக் காப்பாற்ற இயலவில்லை.

ஃபாஜார் ரோடு, புளோக் 422ல் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி அளவில் தீப்பற்றியது. ஈரடுக்கு கொண்ட அந்த வீட்டில் உள்ள பொருள்களில் மளமளவென பரவி எரிந்த தீயை தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடி அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களின் கண்ணில் பூனைகள் பட்டன. இரண்டு அடுக்கு களிலும் 13 பூனைகள் அடுத்தடுத்து மயங்கிக் கிடந்தன.

தீயணைப்பாளர்களில் சிலர் அவசர மருத்துவ உதவித் தொழில்நுட்பர்களாகப் பயிற்சி பெற்று இருந்ததால் அவர்கள் பூனைக்கு உயிர் வாயு செலுத்தினர். அத்துடன் சிபிஆர் சிகிச்சைையும் அளித்தனர். அந்த முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்து, 13 பூனைகளும் சுயநினைவுக்குத் திரும்பின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வீட்டின் அருகில் வசிக்கும் 20 பேர் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் இருந்து தமது பூனைகளை மீட்டதற்காக திருவாட்டி அஸிஸா, தீயணைப்பாளர் களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரி வித்தார். தீப்பிடித்தபோது வீட்டின் இரண்டாம் தளத்தில் யாரும் இல்லை என்று அவர் கூறினார்.