புதிய தகவல் தளம்

புதிய தகவல் தளம்

1 mins read
68a83b52-7ee2-4c6b-b381-2b2fe357ad89
Adhil (left) and Balaji at the Singapore Zoo on Sept 30. PHOTO: CHONG JUN LIANG -

காட்­டுப்­பன்­றி­கள், நீர்­நாய்­கள் ஆகி­ய­வற்­றால் மனி­தர்­கள் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் அண்­மை­யில் சிங்­கப்­பூ­ரில் அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தன.

வன­வி­லங்­கு­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்று மனி­த­ரில் பல­ருக்­கும் தெரி­யா­ததே இதற்­குக் கார­ணம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

உள்­ளூர் வன­வி­லங்­குப் பாது­காப்­புக் குழுக்­களும் தேசி­யப் பூங்­காக் கழ­க­மும் இணைந்து விலங்கு ­க­ளு­டன் சிறந்த சக­வாழ்வை ஊக்­கு­விக்­கும் வகை­யில் புதிய திட்­டத்தை நேற்று தொடங்­கின.

பூமி தினத்தை அனு­ச­ரிக்­கும் வித­மாக இந்­ந­ட­வ­டிக்கை அமைந்­தது.

நமது அக்­கம்­பக்க வன­வி­லங்கு­கள் எனப்­படும் இத்­திட்­டத்­தின் கீழ் இணை­யத்­த­ளம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­மக்­கள் வன­வி­லங்­கு­களைப் பற்­றிய தக­வல்­களை அறிந்து­கொள்­ள­வும் அவற்றை எதிர்­கொள்­ளும்­போது செய்­ய­வேண்­டி­யவை என்ன, செய்­யக்­கூ­டா­தவை என்­னென்ன ஆகி­ய­வற்­றைப் புரிந்து­கொள்­ள­வும் இந்­தத் தளம் வகை­செய்­யும்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் கூடு­த­லான பொது­மக்­களை ஈடு­படுத்­தும் நோக்­கில் நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும்.

இந்­நி­கழ்ச்­சி­கள் குறித்த தக­வல்­கள் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப்­படும்.

உதா­ர­ணத்­திற்கு கிராஞ்சி கட­லோர இயற்­கைப் பூங்­கா­வில் மரம் நடும் நிகழ்ச்­சி­கள், நீர்­நாய்­க­ளைக் கண்­டு­பி­டிக்­கும் நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் மறைந்­து­போன இன­மா­கக் கரு­தப்­பட்ட நீர்­நாய்­கள் எவ்­வாறு இங்கு மீண்­டும் வந்­தன என்­பது குறித்­துப் பொது­மக்­கள் இதில் அறிந்­து­கொள்­ள­லாம்.

வன­வி­லங்­கு­க­ளுக்கு உண­வ­ளிப்­பது, உண­வுக் கழிவை முறை­யாக அப்­பு­றப்­ப­டுத்­தாமை உள்­ளிட்ட மனித நட­வ­டிக்­கை­கள் வன­விலங்கு­க­ளின் பழக்­கங்­களை எப்­படி மாற்­றக்­கூ­டும் என்­பது பற்­றி­யும் வன­வி­லங்­கு­க­ளின் இயற்­கை­யான வாழ்­வி­டங்­கள் குறித்­தும் பொது­மக்­கள் இந்த இணை­யத் தளத்­தில் தக­வல் பெற­லாம்.