நோயாளியை மானபங்கப்படுத்திய துப்புரவாளர்

நோயாளியை மானபங்கப்படுத்திய துப்புரவாளர்

1 mins read
45650c5a-c643-455f-9c58-73c18777f7c9
-

பக்­க­வா­தத்­தால் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வந்த பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­திய துப்­பு­ர­வா­ள­ருக்கு நேற்று இரண்டு ஆண்­டு­கள் இரண்டு மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

56 வய­தான அந்த ஆட­வர் மார்ச் 23ஆம் தேதி சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார்.

பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­யின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு அவ­ரது பெய­ரையோ மருத்­து­வ­ம­னை­யின் பெய­ரையோ வெளி­யிட அனு­மதி இல்லை.

ஆட­வர் சென்ற ஆண்டு ஏப்­ரல் 27ஆம் தேதி அந்­தப் பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­க நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பக்­கத்­துப் படுக்­கை­யில் இருந்த நோயா­ளிக்கு சிகிச்­சையை முடித்து திரையை அகற்­றிய தாதி ஆட­வர் அந்­தப் பெண்­ணைத் தொடு­வ­தைக் கண்டு அதட்­டி­னார்.

தடுப்­புக் காவ­லில் இருந்த ஆட­வர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அவரது தண்­ட­னைக் காலம் சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் இருந்து கணக்­கி­டப்­படும் என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தது.