அனுபவமிக்க வழக்கறிஞரான இயூஜீன் துரைசிங்கம் மீது நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மருத்துவர் இயோ சோ நாமின் வழக்கில் புகார் அளித்தவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இரகசியமாக வைக்கப்படவேண்டிய தகவல்களை துரைசிங்கம் வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் அந்தத் தகவல்களை செய்தி ஊடகங்களுக்கு வெளி யிடும்படி தனது சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்த ஜொஹன்னெஸ் ஹாடியிடம் துரைசிங்கம் கூறினார். அதன்படி செயல்பட்ட ஹாடி மீதும் நீதிமன்ற உத்தரவை மீறியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இருவரும் அடுத்த மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு முந்திய கலந்துரையாடலில் பங்கெடுப்பர். முன்னதாக, சென்ற ஆண்டு ஆகஸ்டில் மருத்துவர் இயோ மீதான வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. அவர் தன்னை மானபங்கப்படுத்தியதாகப் பொய் கூறியதை புகாரளித்த மாது ஒப்புக்கொண்டார்.

