கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போடும் பல நிலையங்கள் மூடப்படும்

கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போடும் பல நிலையங்கள் மூடப்படும்

1 mins read
ab6a637c-a3c9-4742-9115-d226e0195651
பீ‌ஷானில் அமைந்துள்ள இந்த நிலையம் மே 31ஆம் தேதிக்குப் பிறகு மூடப்படும் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுவரும் அதிகமான நிலையங்கள் அடுத்த சில மாதங்களில் மூடப்படும் என சுகாதரா அமைச்சு தெரிவித்துள்ளது. தடுப்பூசிப் போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது 29 நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.

மே மாதம் இறுதி வரை 20 நிலையங்களும், ஜூன் மாதம் வரை ஆறு நிலையங்களும் செயல்படும் என அமைச்சு தெரிவித்தது.

மக்கள்தொகையில் 92 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 73 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் தற்போது தங்கள் இல்லங்களுக்கு அருகில் இயங்கிவரும் நிலையங்களில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவுறுத்தியது.