90 காசுக்கு டுரியான் (காணொளி)

90 காசுக்கு டுரியான் (காணொளி)

1 mins read
5a4de3c7-edf2-468d-a7aa-0f3bbc7844a1
-

பிடோக்கில் உள்ள ஒரு ஃபேர்பிரைஸ் கடை டுரியான் பழத்தை 90 காசுக்கு விற்கிறது. வழக்கமாக ஒரு முழு பழத்தின் விலை $5.

இதனால் அந்தக் கடைக்கு வெளியே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த விற்பனை ஏப்ரல் 22 தொடங்கி ஏப்ரல் 24 முடிவடையும். ஒவ்வொரு நாளும் முதலில் வரும் 300 வாடிக்கையாளர்களுக்கே மட்டுமே இந்தச் சலுகை.

வாடிக்கையாளர்கள் தலா இரண்டு டுரியான்கள் வரை வாங்கலாம்.

ஒவ்வொரு டுரியான் பழத்தின் எடை 600 கிராமுக்கும் 800 கிராமுக்கும் இடைப்பட்டது என ஃபேர்பிரைஸ் உத்தரவாதம் அளிக்கிறது.

212 பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் அமைந்துள்ள ஃபேர்பிரைஸ் கடையில் மட்டும் 90 காசு டுரியான்கள் விற்கப்படுகின்றன.