துவாஸ் வட்டாரத்தில் இன்று மாலை தீ மூண்டதாக சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை தெரிவித்தது.
31 பெனோய் லேனில் உள்ள வளாகத்தில் தீ முண்டது. தீயை அணைக்கும் தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர்.
சுமார் 7 மணியளவில் படை அளித்த தகவலின்படி, தீயை அணைக்க கடலிருந்து குழாய் வழி தண்ணீர் உறியப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தைப் பார்த்த சிலர் எடுத்த காணொளிகளில் சம்பவயிடத்திலிருந்து கரும் புகை கிளம்புவது காணப்பட்டது.

