தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நீக்குப்போக்கான வேலைநேர ஏற்பாடு நிரந்தரமாகவேண்டும்'

2 mins read
c50351d0-4ea8-492d-b141-ee4d858151a4
-

ஊழி­யர்­கள் அனை­வ­ரும் இனி­மேல் வேலை­யி­டத்­திற்குத் திரும்­ப­லாம். என்­றா­லும்­கூட ஊழி­யர்­க­ளுக்குத் தொடர்ந்து நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­க­ளைச் செய்து தரும்­படி முத­லா­ளி­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

கொவிட்-19 தொடர்­பான வேலை யிட நிபந்­த­னை­கள் தளர்த்­தப்­பட்டு இருக்­கின்­றன.

இந்த நிலை­யில், வீட்­டில் இருந்தே வேலை பார்ப்­பது, வேலை­யி­டங்­க­ளுக்கு ஊழி­யர்­களை மாற்று நேரங்­களில் வர­ச்செய்­வது போன்ற ஏற்­பா­டு­கள் நிரந்­த­ர­மாக வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்டியுசி), சிங்­கப்பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகிய முத்­த­ரப்பு அமைப்­பு­களும் கோரிக்கை விடுத்து உள்ளன.

இந்த வேலை கொள்­கையை தொடர்ந்து கடை­ப்பி­டித்­தால் அது ஆற்­றல்­மிகு ஊழி­யர்­க­ளைப் பெற நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வு­வ­தாக இருக்­கும் என்­பதை அந்த முத்­த­ரப்பு அமைப்­பு­கள் அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றன.

தொலை­தூ­ரத்­தில் இருந்து வேலை பார்க்க இய­லாத முன்­களப் பணியாளர்­க­ளுக்­குத் தோதாக பகுதி­நேர வேலை, அப்­போ­தைக்கு அப்­போது வேலை போன்ற நடை­முறை­களும் பரி­சீ­லிக்­கத்­தக்­கவை என்று அவை தெரி­வித்­தன.

இத­னால் இத்­த­கைய ஊழி­யர்­கள் வேலை­க­ளை­யும் குடும்பப் பொறுப்­பு­க­ளை­யும் செம்­மை­யாக நிறை­வேற்ற முடி­யும் என்­பதை அவை சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

உல­கம் முழு­வ­தும் பார்க்­கை­யில், முத­லா­ளி­கள் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களைக் கைக்­கொள்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வரு­கிறது. நீக்­குப்­போக்கு வேலை ஏற்­பா­டு­கள் கார­ண­மாக வேலை, வாழ்க்கை இரண்­டுக்­கும் இடை­யில் நல்ல சம­நி­லை­யை ஊழி­யர்­கள் காண முடி­கிறது.

வேலை­யில் ஊழி­யர்­கள் அதிக ஈடு­பாடு காட்­ட­வும் ஊழி­யர் அணி­யின் உற்­பத்­தித்திறன் பெரு­க­வும் இத்­த­கைய ஏற்­பா­டு­கள் உத­வு­கின்­றன என்­பதை இந்த மூன்று அமைப்பு­க­ளின் அறிக்கை சுட்­டி­க் காட்டியது. இது முத­லா­ளி­க­ளுக்கு பலன் அளிக்­கும் என்­ப­தை­யும் அறிக்கை குறிப்­பிட்­டது.

நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஊழி­யர்­களுக்­கும் தலை­சி­றந்த முறை­யில் உத­வக்­கூ­டிய நீக்­குப்­போக்­கான வேலை­நேர ஏற்­பா­டு­கள் பற்றி முடிவு செய்­வ­தில் ஊழி­யர்­களைக் காலக்­கி­ரம முறைப்­படி முத­லா­ளி­கள் ஈடு­படுத்தி வர­வேண்­டும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.