எல்டர்ஷீல்டு பற்றிய செய்தி உண்மையானதுதான்

மத்­திய சேம­நிதி உறுப்­பி­னர்­க­ளின் 'எல்­டர்­ஷீல்டு' காப்­பு­றுதித் திட்டம் முடித்­துக்­கொள்­ளப்­பட்டு உள்­ள­தாக அவர்­க­ளுக்கு வெள்­ளிக்­கிழமை அனுப்­பப்­பட்ட குறுஞ்­செய்தி உண்மை என்று மத்­திய சேமநிதிக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

உறுப்­பி­னர்­க­ளின் எல்­டர்­ஷீல்டு காப்­பு­றுதித் திட்­டம் முடித்­துக் கொள்­ளப்­பட்டு அவர்­கள் கேர்­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்டத்­தில் சேர்த்­துக்கொள்­ளப்­பட்டு உள்­ள­னர் என்­பதைத் தெரி­விப்­ப­தற்­காகவே அந்­தக் குறுஞ்­செய்தி அனுப்­பப்­பட்­ட­தாக கேள்­விக்கு அளித்த பதி­லில் கழ­கம் கூறியது.

கழ­கம் அனுப்­பிய அந்­தக் குறுஞ்­செய்தி, அதைப் பெற்ற சில­ரி­டத்­தில் சந்­தே­கத்தை, கவ­லையை ஏற்­ப­டுத்திவிட்­டது.

அது மோசடி செய்­தி­யாக இருக்­குமோ என்­று­கூட இணை­யப் புழங்கி­கள் சந்­தேகம் கிளப்­பி­னர்.

கேர்­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டம் 2020 அக்­டோ­பர் 1ஆம் தேதி தொடங்­கப்­பட்ட காப்­பு­று­தித் திட்­டம்.

ஒரு­வர், சுய­மாக குறைந்­த­பட்­சம் மூன்று அன்­றாட செயல்­களில் ஈடு­பட இய­லா­மல்­ போ­கும் அள­வுக்குப் பாதிக்­கப்­ப­டும்­பட்­சத்­தில் அவ­ருக்கு அந்தத் திட்டம் மாதா­மா­தம் பணம் கொடுக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!