எப்போதும் முகக்கவசம் சிரமம் என்பதால் அகற்ற அனுமதி

எப்போதும் முகக்கவசம் சிரமம் என்பதால் அகற்ற அனுமதி

2 mins read
9ba1fa63-2ff7-4cbf-847e-c9b73e8ee45f
-

வேலை இடத்­திற்­குத் திரும்­பும் ஊழி­யர்­கள், வேலை இடத்­தில் முகக்­க­வ­சத்தை அணிந்­த­ப­டியே இருப்­பது சிர­ம­மா­னது என்­ப­தால் முகக்­கவ­சத்தை அகற்­றி­விட அவர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

வேலை இடத்­தில் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்ற விதி அகற்­றப்­படும் போதி­லும் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­ப­தில் ஊழி­யர்­கள் கவ­ன­மாக இருந்து­வர வேண்­டும் என்று கொவிட்-19 அமைச்­சு­கள்நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு­ வோங் கூறி­னார்.

இந்­தப் பணிக்­குழு வெள்­ளிக்­கி­ழமை நடத்­திய செய்­தி­யா­ளர்­ கூட்­டத்­தில் அமெ­ரிக்­கா­வில் இருந்­த­படி காணொளி மூலம் பேசிய அமைச்­சர், வேலை இடத்­தில் முகக்­க­வ­சம் இல்­லா­மல் இருக்­கும்­போது சக ஊழி­யர்களு­டன் நெருக்­க­மாக இல்­லா­மல் விலகி இரு­ந்து பாது­காப்பு இடை­வெளியைக் கடைப்­பி­டி­யுங்­கள்; கூட்டமான இடத்­தைத் தவிர்த்­து­வி­டுங்­கள் என்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் எஞ்சி இருக்­கும் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களில் பெரும்­பா­லா­னவை அகற்­றப்­படும் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

வேலை இடத்­திற்­குத் திரும்ப ஊழி­யர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்டு இருந்த வரம்பு அளவு அகற்­றப்­பட்டு இனி எல்லா ஊழி­யர்­களும் வேலை இடம் திரும்ப அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

இருந்­தா­லும் வேலை இடங்­களில் முகக்­க­வ­சத்தை அகற்ற இரண்டு நிபந்­த­னை­கள் இருக்­கும்.

ஊழியர்­கள் சக ஊழி­யர்­களுடன் நேர­டி­யாக அணுக்­கத் தொடர்­பில் இல்­லா­த­போது முகக்­க­வ­சத்தை அகற்றலாம். வாடிக்­கை­யா­ளர்­களை நேர­டி­யாகச் சந்­திக்­கும் இடத்­தில் அவர்­கள் இல்லை எனில் முகக் கவசம் தேவையிராது.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் மார்ச் 29ஆம் தேதியில் இருந்து கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்ட பிறகு கொவிட்-19 தொற்று பெரி­தும் அதி­க­ரிக்கவில்லை. இதற்கு என்ன கார­ணம் என்று பணிக்­கு­ழு­வி­டம் கேட்­கப்­பட்­டது.

இதற்­குப் பதில் அளித்த பணிக்­குழுவின் மற்­றோர் இணைத் தலை­வ­ரான சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், உல­கச் சாத­னை­யாக சிங்கப்பூரில் அதிக மக்­களுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது முதல் கார­ணம் என்­றார். நாட்­டின் ஒட்டு­மொத்த மீள்­தி­றன் அதி­க­மாகி இருக்­கிறது என்­பது இரண்­டா­வது கார­ணம்.

விதி­களை மீறா­மல் நடந்­து­கொண்டு ஒரே சமூ­க­மாக சிங்கப்­பூர் ஒத்­துழைத்து இருப்­பது இதற்­கான மூன்­றா­வது கார­ணம் என்று சுகா­தார அமைச்சர் விளக்­கி­னார்.

அதே­ கூட்­டத்­தில் பேசிய பணிக்­கு­ழு­வின் மூன்­றா­வது இணைத் தலை­வ­ரான வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஒத்­துழைப்­பும் ஆத­ர­வும் இதில் முக்­கி­ய­மா­னவை என்­பதை மீண்­டும் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

அதோடு, தேசிய முறை­யில் அவர்­கள் கொண்டுள்ள நம்­பிக்­கை­யும் அதற்­கான கார­ணம் என்று அவர் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் இதில் மெத்­த­னப்­போக்கு கூடாது என்று திரு கான் வலி­யுறுத்­தி­னார்.