மேலும் பல கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் செயல்படாது

மேலும் பல கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் செயல்படாது

1 mins read
14b8a62a-1861-459f-aa71-fbf720b5e063
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்ணிக்கை அண்­மைய வாரங்­களில் சீரா­கக் குறைந்து வரு­வதை அடுத்து வரும் மாதங்­களில் மேலும் பல தடுப்­பூசி நிலை­யங்­கள் செயல்­ப­ட­மாட்டா என்று சுகா­தார அமைச்சு வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­தது.

இரு­பது நிலை­யங்­கள் வரும் மே மாதம் இறுதிவரை செயல்­படும். இதர ஆறு நிலை­யங்­கள் ஜூன் இறுதிவரை செயல்­படும் என்று அமைச்சு கூறி­யது.

மரின் பரேட் சமூக மன்­றத்­தில் செயல்­படும் ஒரு நிலை­யம் இந்த மாதத்­து­டன் மூடப்­படும் என்று அமைச்­சின் இணை­யத்­த­ளம் தெரி­விக்­கிறது.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் இப்­போது 29 தடுப்­பூசி நிலையங்­கள் செயல்­படு­கின்­றன.

அமைச்சு தன்­னு­டைய வளங்­களைப் பல கூட்டு பரி­சோ­தனை மற்­றும் தடுப்­பூசி நிலை­யங்­க­ளாக ஒன்று திரட்­டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும்.

இது பற்­றிய விவ­ரங்­கள் பின்னர் அறி­விக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த வியா­ழக் கிழமை நில­வ­ரப்­படி மக்­கள் தொகை­யில் கொவிட்-19க்கு எதி­ரான முத­லி­ரண்டு தடுப்­பூசிகளை­யும் போட்­டுக்கொண்­ட­வர்­க­ளின் விகி­தம் 92%க்கும் அதி­கம். 73 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு உள்­ள­னர் என்பது குறிப்பிடத்தக்கது.