நியூட்டனில் திறப்பு; பலரும் வசதியாக சேவையைப் பெறலாம்
நியூட்டனில் புதிய பிராம் நிலை யம் திறக்கப்பட்டு இருக்கிறது. இளையர்கள், பெரியவர்களிடம் அந்த நிலையம் ஒருமித்த கவனம் செலுத்தும்.
அதன்மூலம் அதிக இளைஞர்கள் மனநல உதவியைப் பெறமுடியும். அந்த அறப்பணி நிலையத்தில் அடிப்படை முழுமன ஈடு பாட்டுடன் கூடிய மனநிலை பயிற்சிப் படிப்பில் பல உத்திகள் போதிக்கப்படுகின்றன.
அதில் இரண்டு ஆலோசனை அறைகள் உள்ளன. முழுமன ஈடுபாடு மீதான பயிற்சிப் படிப்புகளுக்கான இரண்டு ஆய்வரங்கு அறைகளும் அங்கு உள்ளன.
முதியோரிடையே மகிழ்ச்சிகரமான, நலமிக்க வாழ்வை மேம்படுத்துவதில் ஒருமித்த கவனம் செலுத்தும் வகையில் இந்த நிலையம் முதன்முதலாக 2012ல் அமைக்கப்பட்டது. இப்போது நான்கு இடங்களில் நிலையம் செயல்படுகிறது. சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்றைய புதிய நிலைய திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய டாக்டர் ஜனில், சிங்கப்பூர் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புகிறது என்றாலும் பலரிடத்தில் தொடர்ந்து கவலை அல்லது மனக்கலக்கம் நிலவக்கூடும் என்றார்.
இதை கைக்கொள்வதில் ஆதரவு அளிக்கும் வகையில் ஒரு சமூகம் உயிர்நாடியான பணியை ஆற்றலாம் என்றார் அவர்.
மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை வழக்கமான ஒன்றாக ஆக்கி, மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான வழிகளை எட்டும்படி அத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு ஊக்கமூட்டி அதன்மூலம் சமூகம் ஆதரவு அளிக்கலாம் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
பிராம் நிலையம் சென்ற ஆண்டு டிசம்பரில் புதிய கலங்கரைவிளக்கச் செயல்திட்டம் ஒன்றைத் தொடங்கியது என்று இந்த நிலையத்தை நிறுவிய இணைப் பேராசிரியை ஏஞ்சி சியூ தெரிவித்தார்.
அந்தச் செயல்திட்டத்தில் மனநல அறிவும் நேரடிப் பயிற்சி அம்சமும் உண்டு. பள்ளிகளுக்கான கல்வி அறிவுச் செயல்திட்டத்தில் டான் டோக் செங் மருத்துவமனையும் ஹார்வர்ட் மருத்து வப் பள்ளியின் மனோவியல் உதவி பேராசிரியர் சாரா லாஸாரும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஜனவரி முதல் 1,900 மாணவர்களும் 350 ஆசிரியர்களும் 50 பெற்றோரும் அந்தச் செயல் திட்டத்தில் கலந்துகொண்டுள்ள னர். 15 வயதும் அதற்கு அதிக வயதுள்ள மாணவர்களுக்கு நேரடி பயிற்சியையும் அந்தச் செயல்திட்டம் வழங்குகிறது.
இதன்மூலம் அவர்கள் வேலை தேர்ச்சிகளையும் மனநல மீட்சியையும் பெறலாம். டிசம்பர் முதல் 20 இளைஞர்கள் அதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
சுகாதார அமைச்சைச் சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இலவசமாக ஆலோசனை சேவைகளையும் பிராம் நிலையம் வழங்குகிறது.
அந்த நிலையத்தில் மனஉளைச்சலை குறைப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொண்டவர்களில் டான் டிங் ஸுவான் என்ற 21 வயது இளைஞரும் ஒருவர்.
இவர் தன்னுடைய முதலாளியை எப்படி சமாளிப்பது என்பதன் தொடர்பில் மனக்கவலையுடன் இருந்தார். தேசிய சேவையின்போது சட்டாம்பிள்ளைத்தன பாதிப்பும் இவருக்கு ஏற்பட்டது.
இந்த இளைஞர் இப்போது இந்த நிலையத்தின் நேரடிப் பயிற்சிப் படிப்பில் சேர்ந்து இருக்கிறார். இந்நிலையத்தில் நான் கற்ற முழுமன ஈடுபாட்டுப் பயிற்சிப் படிப்பு என் உடலில் பதற்றத்தைக் கண்டுஅறிய எனக்கு உதவி இருக்கிறது என்று இவர் தெரிவித்தார்.
தன்னைப் போன்ற இளைஞர்களை எட்டி உதவலாம் என்று இவர் நம்பிக்கை தெரிவித்தார்.

