துவாஸ் தொழில்துறை கட்டடத்தில் தீ மூண்டது

துவாஸ் தொழில்துறை கட்டடத்தில் தீ மூண்டது

1 mins read
73b214f2-a57e-45fc-80fe-6f6682286e84
-

துவா­சில் எண் 31 பினோய் லேன் முக­வ­ரி­யில் உள்ள கட்­ட­டத்­தில் நேற்று பிற்­ப­க­லில் பெரிய அள­வில் தீ மூண்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஃபேஸ்புக் பக்­கத்­தில் கூறியது.

அந்­தப் படை­யி­னர் அங்கு சென்­ற­போது முழு கட்­ட­ட­மும் தீப்­பி­டித்து எரிந்­து­கொண்டு இருந்­தது. தீயை அணைக்­கும் பணி­கள் தொடர்ந்­த­தாக அந்­தப் படை தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொளி ஒன்றைப் பார்க்­கை­யில் இரண்டு தீய­ணைப்பு வாகனங்­கள் தீயை அணைத்­துக் கொண்டு இருந்­தது தெரிந்­தது.

தீ மூண்ட முக­வ­ரி­யில் 'ஆஃப்ஷோர் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் சர்­வீ­சஸ் ஹோல்­டிங்ஸ்' என்ற ஒரு நிறு­வ­னம் பதி­யப்­பட்டுள்ளது.