சிரமமான ஈராண்டுகளைக் கடந்து சிங்கப்பூர் தனது வழக்கநிலைக்குத் திரும்ப சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் நிபுணத்துவமும் கடப்
பாடும் முக்கிய காரணங்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை நடத்திய சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், கொள்ளைநோய் காலத்தில் சிரமங்களைத் தாங்கி, பணியாற்றிய 62,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
நாளை முதல் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, கொள்ளைநோயுடன் வாழும் முறைக்கு சிங்கப்பூர் மாறவிருக்கும் நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் எண்ணிக்கை வரம்புக்குட்பட்டதாக இருந்தபோதிலும் அவர்கள் வழங்கிய பராமரிப்பின் தரம் உயர்ந்தது. அவர்கள் தொடர்ச்சியாக முன்களத்தில் நின்று உறுதியுடனும் நெகிழ்ச்சியுடனும் பணியாற்றினார்கள்.
"புதிய கிருமியைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிந்திராதபோதே அவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள்," என்று திரு லீ கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "ஆரம்பகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குவிடுதிகளில் கொள்ளைநோய் பரவத் தொடங்கியபோது மருத்துவர்களும் தாதியரும் மற்ற தொண்டூழியர்களும் 'அச்சமின்றி' தங்களது கடமையில் ஈடுபட்டனர்.
"நாள் முழுக்க முழுமையான மருத்துவக் கவச உடையை அணிந்து பணியாற்றியவர்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் முதன்மையானவர்களாகவும் வழக்கமான பரிசோதனைகளை நடத்தி பணியை முடித்துக்கொள்ளும் கடைசிப் பணியாளர்களாகவும் அவர்கள் விளங்கினர்.
"இந்த ஈராண்டுகள் அவர்
களுக்குச் சவால்மிக்கவையாக இருந்தன. வழக்கமான நாள்களைக் காட்டிலும் அதிக வேகத்துடன் செயல்படவேண்டி இருந்தது.
"எனவே, நமது சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவான நமது முயற்சிகளைத் தொடரவேண்டும்," என்று திரு லீ தெரிவித்தார்.
ஈராண்டு காலமாக பல்வேறு சுகாதாரப் பணியாளர்களால் விடுப்பு எடுக்க இயலவில்லை. ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் அவர்கள் பணி புரியும் நிலை இருந்தது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடையே உளவியல் அடிப்படையிலான மன அழுத்தமும் மனச்சோர்வும் ஏற்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டின் முதல் பாதி யில் மட்டும் 1,500 பேர் சுகாதாரப் பராமரிப்புப் பணிகளில் இருந்து விலகினார்கள். தற்போது அவர் களுக்கு விடுப்பு வழங்கும் முறை திரும்பி இருக்கிறது.
கொள்ளைநோயின் தொடக்கம் முதல் தொடர்ந்து முன்களத்தில் நின்று பணிபுரிந்தார்கள்

