ஜூரோங் வட்டாரத்தில் உள்ள காப்பிக் கடைகளின் கழிப்பறைகளில் சுகாதாரத்தைப் பேண புதிய வசிப்போர் குழு ஒன்று முன்வந்து உள்ளது.
துப்புரவாளர்களின் தலையீடு இல்லாவிட்டால் குப்பை எந்த அளவுக்கு மலைபோல் குவியும் என்பதை விளக்க பிரசார இயக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு சுற்றுலாத்தல நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. 'அக்கம்பக்க கழிப்பறை சமூகக் குழு'வில் இடம்பெற்று உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அடித்தளத் தலைவர்களில் நான்கில் மூவர் அடுத்த மாதத்தில் இருந்து சேவையில் இறங்குவர்.
ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 புளோக் 318, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41 புளோக் 494, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1 புளோக் 429 ஆகியவற்றில் உள்ள காப்பிக் கடைகளில் அவர்கள் கழிவறை சுத்தம் குறித்து பிரசாரம் செய்வர்.
அந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களையும் கடை
களின் ஊழியர்களையும் நல்ல கழிப்பறை சுகாதார நடைமுறை
களைக் கடைப்பிடிக்குமாறு அந்தக் குழுவினர் கேட்டுக்கொள்வார்கள்.
கழிப்பறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்
படின் அது குறித்து கட்டட உரிமையாளர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவிப்பர்.

