மரினா பே எம்ஆர்டி நிலையத்திற்குச் செல்லும், அங்கிருந்து வெளியேறும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பின் ஒருபகுதி அகற்றப்பட்டுள்ளது. 'டிக்டோக்' சமூக ஊடகத் தளத்தில் இம்மாதம் 5ஆம் தேதி தெரிவிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
இந்த எம்ஆர்டி நிலையத்தின் வெளியே உள்ள திடலில் சட்ட
விரோதமாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் இந்தத் தடுப்பு அமைக்கப்பட்டது. அதன் காரணமாக, எம்ஆர்டி நிலையத்திற்குச் செல்ல இரண்டு நிமிட நேரம் தடுப்பைச் சுற்றி வரவேண்டி இருந்தது.
அவசரமாகச் செல்ல விரும்பிய சிலர் தடுப்புகளின் மீது ஏறிக் குதித்துச் செல்ல வேண்டிய நிலையும் காணப்பட்டது. தடுப்பின் ஒரு பகுதி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் புதிய தடுப்பு ஏற்
படுத்தப்படுமா என்ற விவாதம் எழுந்தது.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு நிலப் போக்கு
வரத்து ஆணையம் பதிலளித்தது. தடுப்பு அகற்றப்பட்ட பகுதியில் புதிய நடைபாதை அமைக்கப்படும் என்றும் இவ்வாண்டின் நடுப்பகுதியில் அதற்கான வேலை நடக்கும் என்றும் ஆணையம் கூறியது.

