கடைத்தொகுதி சந்தை வர்த்தகம் திரும்பியதில் பலருக்கும் நிம்மதி

கடைத்தொகுதி சந்தை வர்த்தகம் திரும்பியதில் பலருக்கும் நிம்மதி

1 mins read
9c9332f3-a411-446b-a2ce-91ea6d6edf89
நொவினா ஸ்குவேர் கடைவிரிப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடைத்­தொ­குதி முற்­றத்­தில் பொருள்­க­ளைக் குவித்து வியா­பா­ரம் நடத்த மீண்டும் அனு­மதி கிடைத்­தது பல­ருக்­கும் மகிழ்ச்­சி­யைத் தந்­துள்­ளது. அவ்­வாறு மகிழ்வைப் பகிர்ந்­து­கொண்டோ ரில் மஷிடா அப்­துல்­லா­வும் ஒரு­வர்.

'லவேரா எஸ்ஜி' என்­னும் பெய­ரில் மாவுப் பண்­டங்­களை விற்­கும் இவர், செங்­காங்­கில் கொம்­பாஸ் ஒன் கடைத்­தொ­கு­தி­யில் நடை­பெற்று வரும் விற்­ப­னைச் சந்­தை­யில் பங்­கேற்றுள்­ளார்.

முதல் நாள் விற்­ப­னை­யில் பெரு­ம­ள­வில் வாடிக்­கை­யா­ளர்­கள் திரண்டு வந்­தது இன்ப அதிர்ச்­சி­யைத் தந்­த­தாக திரு­வாட்டி மஷிடா, 37, தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் கூறியுள்ளார். கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக இணை­யம் வழி­யாக தாம் விற்­று­வந்த கேக்­கு­களை மக்­கள் நேர­டி­யாக இப்­போது வாங்­கு­வ­தைக் காண்­ப­தைக் கண்­ட­தாக அவர் அந்­தப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

முதல் நாள் விற்­ப­னை­யில் கிரு­மிப் பர­வல் கால விற்­ப­னை­யைக் காட்­டி­லும் 30 விழுக்­காடு அதி­கம் நடை­பெற்­ற­தா­கக் கூறும் இவர் சரு­மப் பரா­ம­ரிப்­புப் பொருள்­க­ளை­யும் விற்­கி­றார்.

மற்­றொரு வியா­பா­ரி­யான லிம் சிம் வான், 65, கடைத்­தொ­குதி சந்தை வியா­பா­ரம் திரும்பி வந்­த­தன் மூலம் அதிக வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பெறமுடி­யும் என்றார். எல்­இடி பல்பு போன்ற பொருள்­களை இவர் விற்­று­வ­ரு­கி­றார்.

நொவினா ஸ்கு­வேர், செஞ்­சுரி ஸ்கு­வேர், சிட்டி ஸ்கு­வேர் மால், தக்­கச்­சி­மாயா மற்­றும் கிரோட் வோர்ல்ட் சிட்டி போன்ற கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் மீண்­டும் தொடங்கி நடந்து வரும் சந்தை வியா­பா­ரத்தை 'சண்டே டைம்ஸ்' செய்­தி­யா­ளர் இரு நாள்­கள் கண்டு வந்­தார்.