கொவிட்-19 சூழலில் புதிய திறன்களைப் பெற்ற ஊழியர்கள்

கொவிட்-19 சூழலில் புதிய திறன்களைப் பெற்ற ஊழியர்கள்

1 mins read
91554c14-361b-45ec-83ae-c90d030667e8
-

கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு சமூக நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­று­கள் ஏற்­பட்­ட­போ­தும் ஊழி­யர்­கள் தொடர்ந்து புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் அறிக்கை தெரி­வித்­தது.

கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் கிட்­டத்­தட்ட பாதி பேர், கொள்ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் தங்­களின் வேலை சார்ந்த இலக்­கு­கள் மாறி­ய­தா­க­க் கூறி­னர். சிலர் தாங்­கள் இருக்­கும் துறையை மாற்­றிக்­கொள்­வது குறித்­தும் ஆலோ­சித்­த­னர்.

தங்­க­ளின் வேலை­யில் உத­வும் புதிய திறன்­க­ளைக் கடந்த ஈராண்டு­களில் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 51 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர். குறிப்­பாக 30லிருந்து 39 வய­துக்கு இடைப்­பட்­டோர், பட்­டக்­கல்வி மேற்­கொண்­டி­ருப்­போர் உள்­ளிட்­டோ­ரி­டையே இந்த கருத்து இருந்­தது.